உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

87

'சைவம், வைணவம்' என்னும் சமயத்தில் வழிவழியாக வந்த குடியினரும் பிறபிற சமயங்களில் புகுதல் நேர்ந்த தென்ன? சமயம் சமையற் கூடமாகியது! சாதிக்களம் ஆயது! பொது நலம் போக்கித் தன்னலச் சுரண்டல் மையம் ஆகியது. அறிவு நிலையம் அறியாமைக் கூடம் ஆகியது. இவ்வெல்லாவற்றுடன் தொண்டு என்பதைக் கண்டு கொள்வதும் பாவம் எனத் தொலைவில் வைத்தது. இந் நிலையில் வேற்றுச் சமயப் புகவு நேர்தல் கட்டாய மாகியது.

அங்கே நில்! இங்கே நில்! என்று தமிழ்ச் சமயத்தார் தடை யமைத்துத் தனித்தனியே மக்களைப் பிரித்து வைத்தனர். 'வருக வருக' என வாயிலைத் திறந்து வைத்து வரவேற்கப் புதுச்சமயத்தார் கிளர்ந்தனர் பொது மாந்தர் உள்ளம் வரவேற்பை நாடுமா? புறக்கணிப்பை நாடுமா? மதிப்பாக்கத்தை நாடுமா? இழிவுறுத் தத்தை நாடுமா?

ஒருவர்படும் துன்பத்தில் பங்குகொள்ளாத வாழ்வுச் சிக்கலில் தீர்வு காணாத சமயத்தை எவரே வாய்ப்பென ஒட்டிக் கொண்டிருப்பார். நட்புக்குக்கூட அத்தகையரை ஒன்ற முடியாத போது இறைமைப் பாட்டுக்கு ஏற்பரோ?

தொண்டு

பாண்டியன் யன் வெப்பு நோயிற் கிடந்தான், ஆளுடைய ய பிள்ளையாரும், சமணப் பெரியாரும் அருகில் இப்பாலும் அப்பாலும் நின்றனர். தத்தம் சமயச் சீர்மைகளைச் சொல்லித் தருக்கிட்டனர். அத் தருக்கு, நோயர்க்கு வேண்டுவதோ? நோயற்கு வேண்டுவது அந்நோய் நீக்கமே! பிறிதன்றே!

பாண்டியன் பகர்ந்தான்; பாண்டியன் உள்ளோட்டத்தில் சேக்கிழார் பகர்ந்தார். என் பிணியைத் தீர்ப்பவர் எவர்? அவரே வெற்றி கொண்டவர்; யான் அவர் பக்கஞ் சேர்ந்து விடுவேன்" என்றான் பாண்டியன். இது தானே மெய்ம்மை!

இந்நாள் அயற் சமயம் புகுவாளரை வினவுக!நூற்றுள் தொண்ணூற்று ஒன்பதின்மர் என்ன சொல்கின்றனர்? கல்விக்கும், தொழிலுக்கும், தன்மானத்திற்கும் இச்சமயம் ஏந்தாக உள்ளது என்பதே! சமயத்தின் கொள்கைச் சிறப்பு என்று எவர் கண்டு போயினார்? தமிழர் சமயத்தில் இல்லாச்சால்பா ஆண்டுள்ளது? சால்புகள் ஏட்டில் உள்ளன; எழுத்தில் உள்ளன; நெஞ்சில் நிறுத்தி மேடைப் பொழிவுக்கு உள்ளன; தன்னலப் பசப்புக்கு உள்ளன!