உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

சால்புக்கு உள்ளனவோ? இறைமையைக் காக்க உள்ளனவோ? "தொண்டலால் துணையும் இல்லை இறைவனுக்கே" என்னும் தூய்மை உண்டா? வாய்மை உண்டா? துவள்வாரைத் தூக்கி நிறுத்தக் கைந்நீட்டாத எச்சமயத்தையும் வாழ்வுப் போராட்ட முடையார் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டார் என்பது மெய்ப்பிக்கப்பட்ட செய்தியாம்! தேனென்று எழுதிய தாளை நாக்கில் வைத்த அளவில் சுவைக்கின்றதெனச் சொல்வாரார்?

மீட்பர்

தொண்டர்

தொண்டால் சமயம் காத்தல் கடனாக சமயமாகத் தமிழர் சமயத்தைக் காத்தல் கடனாக - அறிஞர் தலைப்படல் வேண்டும்! அருளாளர் தலைப்படல்வேண்டும். அத் தலைப்பாட்டின் பின் அயற்சமயம்புகுந்தார் மீள்வரேல் அவரை அரவணைத்துமீட்கும் மீட்பர் வேண்டும். இவற்றைக் கருதும் கா.சு.

"நமது சமயத்தில் இருந்து புறச்சமயம் புகுந்தவரை மீட்டும் தமிழர்சமயத்தில் ஏற்றுக் கொள்ளுதல் பொருத்த முள்ளதே யாகும். சமண சமயம் புகுந்த திருநாவுக்கரசர் மீண்டு சைவ சமயத்துக்கு வந்தகாலை அவர் தமக்கையாராகிய திலகவதியார் அவருக்குத் திருநீறு அளித்து அவரைத் தடையின்றித் திருவதிகைக் கோயிலுள் அழைத்துச் சென்றமை பெரியபுராணத்திற் கூறப் பட்டது" என்கிறார்.

திருமடம்

இனித் திருமடத்தலைவராவார் எவர்? தமிழர்! தமிழ்ச் சமயத்தர்! அவர் தம் செயன்மைகள் தமிழுக்கும் தமிழர்க்கும் ஆக்கந் தருவனவாக அமைந்துளவோ?

தமிழர் தந்த அறக் கொடையால் செழிக்க வாழும் அம் மடத்தர், கொடை தந்த மக்கள் நலத்தைப் பேண வேண்டும் அன்றோ! ஆங்கும் என்ன சாதிச் சழக்கு! மாற்றுக் குறை மதிப்பீடு! சிவனெறி மடத்தார் சிவனெறிச் சால்பு உடையரா என்னும் நோக்கை நோக்குதல் இன்றி, இனப்பார்வை பார்த்தல் அவர் தமிழரல்லர், 'தமிழாசியர்' என்பதையே காட்டும்! அவர்தாமும் தமிழ் வழிபாட்டுக்கு முயன்றனரா? முயல்வார்க்கு ஊக்கம் தந்தனரா? தமிழாரியராகத் தம்மைக் கொண்டவர் எப்படித் தமிழ் நலம் நாடுவார்? தமிழர் நலம் நாடுவார்?