உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

89

சமய அழுத்தத்தில் சற்றும் குன்றாத பெருமகனார் ஆறுமுக நாவலர்! அவர் தமிழ்ச் சைவச் சான்றோர் ஆயின் தமிழ் வழி பாட்டை வலியுறுத்தினரா? இந்நாள் சமயப் பொழிவில்

ணையின்றி விளங்கும் திருமுருக வாரியார் தமிழ்ச் சமயப் பொழிவாலேயே சீரும் சிறப்பும் எய்தி வருபவர். இருளடைந்த திருக்கோயில்களுக்கெல்லாம் ஒளிவிளக்கேற்றி வருபவர். திருப் பணிகள் குடமுழுக்குகள் எல்லாமும் செய்பவர். எனினும் தமிழ் வழிபாட்டை அறவே கருதினாரல்லர்; மெய்ப்பொருட் சமயச் செம்பொருள் வழிகாட்டாராய்ப் புனைவுச் சமயத்திலேயே பொழுதெலாம் போக்கிவருதல் கண்கூடு. அத்தகையரும் தமிழ் வழிபாட்டைக் கருதாமை தமிழர்க்கென்றேயமைந்து விட்ட தீக்கோளே போலும்! வாரியார் பெருமகனாரைத் தனியர் எனலாமோ? அவர் ஒர் அமைப்பு! ஒரு நிறுவனம்! அதனால் திருமடத்தார் கூட்டிலே ஆறுமுக நாவலரும் அருளின்பவாரி யாரும் எண்ணப்பட்டனர் என்க.

‘ஆதீனம்’ பற்றிக் காசு கருதும் கருத்துக்கள் காண்க:

ஆதீனத் தலைவர்கள் தமிழ் மொழியையும் தமிழர் சமயத்தையும் இரண்டு கண்களாகப் பாதுகாக்கக் கடமைப் பட்டிருக்கின்றார்கள். ஆதீனங்கள் சிறந்த கலை நிலையங்களாய் இருத்தல் வேண்டும. தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் ஆதீனத் தலைவர்களால் நிலைநாட்டப்படுதற்குரியன. கிளை மடங்களிலும் தலைமையிடத்திலும் ஏழைத் தமிழர்க்குப் பயன்படும் அறச்சாலை களும் தொழில் நிலையங்களும் அமைத்தல் வேண்டும்.

ஆகிரா (Agra)வில் உள்ள இராதா சுவாமியின் தொழில் நிலையம் போன்ற அமைப்புக்கள் தமிழர் வறுமையை ஒழிக்கத் துணைபுரியும். தமிழருடைய ஆதீனச் செல்வம் தமிழர்க்கே பயன்படுதல்நலம். தமிழர் சமயம் இன்னதென்று அறியாது தமிழ்ப் பற்றும் இல்லாது தன்னலங் கருதும் புற மதத்தினர்க்கு அது பயன்படுத்தல்கடியத்தக்கது. தமிழர் சமய நோக்கங்களுக்கு ஏற்ற முறையில் ஆதீனங்களையும் மடங்களையும் ஒழுங்கு படுத்து வதற்கு அவசியமாயின் சட்டம் நிறைவேற்றுதல் நலம்.

பெண்டிர்

மக்கட் கூட்டத்தின் செம்பாதி (சரிபாதி) மகளிர். சிலவிடங் களில் மிகை எனலும் தகும். அத்தகு பெண்டிர் நலம் பேணப்படுதல்