உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

85

அமைதிப்படுத்துவதற்காகத், 'தமிழிலும் வழிபாடு செய்யப்படும்' என ஒரு பலகை நான்றுகொண்டு கிடக்கும்! அதனைச் சொல்லி ஒருவர் தமிழ் வழிபாட்டைக் கேட்டால் மொழித் துண்டாராக எண்ணி முணகிக் கொண்டு வடமொழி மந்திரம் போலவே சொல்லுதல் வழக்கு! விரியச் சொல்வானேன்? ஓதாதுணர்ந்து பல்லாயிரம் பாடல்களைப் பாடியவர் வள்ளலார். அவரது பொது நிலைக் கழகத்திலேயே (சன்மார்க்க சபையிலேயே) வடமொழி வழிபாடே நிகழ்த்தப்படுகிறது. அதனைச் செய்து நடைசார்த்திய பின்னரே புறத்தே நின்று அருட்பாப்பாடும் நிலை! இவற்றை எண்ணி வழிபாட்டாக்கம் குறித்துக் கா.சு. கூறும் கருத்துக்கள் மிகச் சீரியவை:

"அருச்சனைகளைத் தமிழர்கள் கோயில்களில் தமிழிலேயே நடத்த ஏற்பாடு செய்தல் வேண்டும். பொருள் விளங்காத மொழியில் இறைவனை வாழ்த்துவதிலும் தமிழில் நாமம் சொல்லி மலர்தூவிப் போற்றுதலே வழிபடுவார்களுக்கு அன்பு பயக்கும்.

"பூசை முறைகளைத் தமிழிலே எழுதுவித்துப் பூசைகளைத் தமிழில் நடத்தஅருச்சகர்களைப் பழக்குதல் வேண்டும். கிரியை களின் கருத்தை விளக்கும் ஆற்றல் அருச்சகருக்கு இருத்தல் வேண்டும்.அருச்சகர் பயிற்சிக்காக ஒரு கலாசாலை அமைத்தல் வேண்டும். சைவ வைணவ சமயப் பெருந்தலைவர்கள் தமிழிலேயே றைவனைத் துதித்திருக்கின்றார்கள். ஆதலால் தமிழிலே அருச்சனை செய்தல் கூடாது என்றல் பெருந்தவறாம்.'

தமிழில் வழிபாடு செய்தல், மந்திரங்களைப் பெயர்த்தல் முதலியவற்றைப்பற்றி விரிவாகக் கூறுகிறார் (125-7). வழிபாடு செய்தற்கும் குலப் பிறப்புக்கும் தொடர்பில்லாமையையும் விளக்கு கிறார்:

"பிறப்பைப் பற்றிய உயர்வு தாழ்வு தமிழர் வழிபாட்டிற்கு இல்லை என்பதைக், காசியில் யாவரும் வருண வேறுபாடின்றிச் சிவபெருமானைப் பூசிக்கும் வழக்கில் வைத்து அறிந்து கொள்க. காசியில் நடக்கும் முறை வழிபாட்டினர்க்கு வசதி தராதது. ஆதலின் நல்லொழுக்கமும் கள்ளுண் விலக்கும் உடைய அறிஞர் எக்குலத்தவராயினும் பூசனை முறையறிந்து அன்பாய்ப் பூசனை செய்யக் கூடுமானால் அவரை ஆலயத்தில் அருச்சகராக நியமித்துக் கொள்ளுதல் நலம்."