உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தன்னிலையால் கற்பிக்கும் கலைநிலையமாகக் கோயில் திகழல் வேண்டும் என்பது சாலும்.

கோயில் தூய்மை குறித்து 'கா.சு.' கூறுகிறார்:

"கோயில்களின் மூலத் தானங்களையும் பிற இடங்களையும் எப்பொழுதும் புனிதமாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கிறித்துவக் கோயில்களும் மகம்மதியப் பள்ளிகளும் மனங்கவர் புனிதத்தோடு விளங்குதல் போல் நம்முடைய ஆலயங்கள் தூய்மை யோடு திகழ்வதில்லை. எண்ணெய்ச் சிக்கினால் மாசடைந்து அழுக்கு மிகுதற்கு இடமாயுள்ள பகுதிகளை நாள்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். மூலத்தானங்களில் திருவடிவங்களைக் குருக்கள்மார் தூய்மையாக வைப்பதில்லை. ஆறு காலத்திலும் எண்ணெயையும் தண்ணீரையும் கொட்டி வழுக்கும் அழுக்கும் சேருமாறு செய்து விடுகிறார்கள். இதை அறநிலையத் தலைவர்கள் ஒரு சிறிதும் கவனிப்பதில்லை. ஆறு காலத் திருமுழுக்கைப் பார்க்கிலும் இருகால் ஒருகால நீரோட்டே போதுமானது. எண்ணெய் அழுக்கினைச் சீயக்காய், நெல்லிப் பருப்பு, மாக்காப்பு, மஞ்சட் காப்பு முதலியவற்றாற் போக்கித் திருவொற்றாடை யினால் திருவடிவங்களையும் இடங்களையும் துடைத்துத் துப்புரவு செய்ய வேண்டும். விளக்குகளை நாள்தோறும் துடைத்து, அவற்றில் துய்மையான திரியிடல் வேண்டும்."

கோயில் வருவாய்க்கு ஏற்பத் தகவாகச் செலவிடல், கூட்டத்தைக் கட்டுப்படுத்தி நெறிமையாக்கல், விரைந்தும் கருத்தி ன்றியும் பலர் பெயர்க்கு ஒரே வேளையில் அருச்சனை செய்தல் என்பவற்றையெல்லாம் கருதிக் கூறுகிறார் கா.சு.'

அருச்சனை (மலர் வழிபாடு)

"அருச்சனை பாட்டேயாகும் என்பது தமிழ்நெறி. அந் நெறியால் உண்டாயதே தேவபாணி, பரிபாடல், திருவிசைப்பா, தேவாரம்,திருவாசகம் நாலாயிரப்பனுவல், திருப்புகழ், திருவருட்பா என்னும் இன்னவெல்லாம். இவை யெல்லாம் திருக்கோயில் திருமுன்னிலேயே உடையவர்களால் பாடப்பட்டவை. இவற்றைச் சொல்ல - இன்னும் அவ்வக்கோயிலுக் கென்றே பாடப்பட்ட திருப்பாடல்களைச் சொல்லி அருச்சனை செய்தலும் வழி பாடாற்றலும் இல்லை! வடமொழி வழிபாடே வழிபாடாக நிகழ்கின்றது. தமிழில் வழிபாடு வேண்டும் என்று கேட்பவர்

-