உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

83

இம்மட்டோ? ஆட்சிக் களங்கள், கல்விக் களங்கள், தொழில் நிறுவனங்கள் இங்கெல்லாம் தமிழ்நிலைமை என்ன? வெள்ளை ஆங்கிலர் போனாலும் கறுப்பாங்கிலர் கட்டிக் காக்க அவரினும் மேலாகக் காத்திருக்கும் நாட்டில், ஆட்சி மொழியும், பயிற்று மொழியும், நடுவர் மன்ற மொழியும் தாய்த் தமிழ் மொழியாக இருக்குமோ?

அடிப்படையை விட்டு விட்டு வாண வேடிக்கை காட்டி என்ன பயன்? மூச்சுக்குக் கேடாய் முழக்கமிட்டு என்ன பயன்? ஆட்சி மொழி

-

-

நாட்டுக்கு விடுதலைப் பாட்டுப் பாடி நாற்பது ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும், தமிழின் நிலை கோப்புகளில் தமிழ் நாட்டு அரச அலுவலகங்களின் கோப்புகளில் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்ற முன்னேற்றம் உள்ளது! கையெழுத்து மாற்றத்திற்கே நாற்பது ஆண்டுகள் வேண்டியிருந்தால், தலையெழுத்து மாற்றத்திற்கு எத்தனை நாற்பது ஆண்டுகள் வேணடியிருக்கும்?

இவற்றையெல்லாம் ஏறத்தாழ ஐம்பான் ஆண்டுகளின் முன்னே எண்ணிப்பார்த்து வலியுறுத்துகிறார், வழிகாட்டுகிறார் கா.சு. அன்றே தமிழர்கள் எண்ணாதொழியினும் இன்றேனும் எண்ணிப் பார்த்து நடைப்படுத்த வேண்டுமே!

தூய்மை

கோயில் இறையுறை இடம்; உடலும் இறையுறை இடமே; 'ஊனுடம்பு ஆலயம்' என்பது திருமந்திரம். முன்னது படமாடக் கோயில்'; பின்னது 'நடமாடக் கோயில்; இக்கோயில்களின் அகமும் புறமும் தூய்மை போற்றப்பட வேண்டும். "புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும்" என்பது இருவகைக் கோயில்களுக்கும் ஏற்புடையதே.

கோயிலின் தூய்மை, அமைதி ஆய்வை வழிபாட்டுக்கு வருபவரை வயப்படுத்தி இறைமை யூட்டத் தக்கதாக இருக்க வேண்டியது கட்டாயமானது. மூக்கைப் பொத்தும் நெடியும், கண்ணைப் பொத்தும் காட்சியும் நினைக்க வெறுக்கும் நிலையும் ஆங்கு நிகழல் கூடவே கூடாது. அவரவர் உடலையும், உள்ளத் தையும், உறையுளையும் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கும்