உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

113

அத்தகு கருவிகளுள் ஒன்று தலையாய ஒன்று தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரரால் எழுதப்பட்ட ‘வாழ்க்கைக் குறிப்புகள்' என்னும் நூற்கருவியாம்!

வடக்கே வாய்மை ஆய்வு (சத்திய சோதனை) அரும்பியது! தெற்கே வாழ்க்கைக்குறிப்பு முகிழ்த்தது!

வாழ்க்கைக்குறிப்பின்வழியே, திரு.வி.க.வின் தமிழ்த் தொண்டு, அவர் தம் வரலாற்றொடும் வாழ்வொடும் - பின்னிப்பிணைந்து விளங்கும் காட்சி வெளிப்படுகின்றது! மேலும் அவர் அருளிய நூல்கள், கட்டுரைகள் எல்லாமும் பளிச்சிட்டு அவர்தம் நூல்களை ஆய்ந்தோர் நூல்களும் உதவுகின்றன! எனினும், ஆய்வுகள் அனைத்தும் ஒரு முழு மர ஆய்வை ஒன்றிரண்டாக அகப்பட்ட லைகளைக் கொண்டு ஆய்வதாகவே அமைகின்றன! ஆம்! அகன்று விரிந்த கடலை ஒருபார்வையால் பார்த்து முடிக்க வல்லார் யார்? ஓங்கி உயர்ந்த வானை ஒரு பார்வையால் பார்த்து முடிக்க வல்லார் யார்? பரந்து விளங்கும் நிலப்பரப்பனைத்தையும், நேரே பார்க்கும் ஒரு பார்வையால் பார்த்து முடிக்க வல்லார் யார்?

“நிலத்தினும் பெரிதே! வானினும் உயர்ந்தன்று! நீரினும் ஆரள வின்றே"

என்னும் குறுந்தொகையைத்தானே (3) நெடுந்தொகையாக நீட்டித் திரு.வி.கவின் தமிழ்த்தொண்டைக் காண வேண்டியுள்ளது.