உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தொண்டு

தொண்டு என்பதன் பொருளென்ன? விளக்கமென்ன? தொண்டுக்கே தம்மை ஆக்கிய தொண்டர் திரு.வி.க. உரைக்கிறார். எங்கே? தொண்டர் மாநாட்டிலே 1

தொண்டு-பொதுவியல்

"உலகில் பணிகள் பலதிறப்பட்டுக் கிடக்கின்றன. அவை யாவும் தொண்டாகுமோ? ஆகா.

"பலதிறப்பட்டுக் கிடக்கும் பணிகளை, இரு தொகுப்பாகக் கூறிடலாம். ஒரு தொகுப்பு, தன்னலங்கருதி ஆற்றப்படும் பணிகள், ன்னொரு தொகுப்பு, பிறர் நலங்கருதி ஆற்றப்டும் பணிகள். இவ்விரண்டனுள் பிறர்நலங்கருதி ஆற்றப்படும் பணியையே தொண்டெனக் கோடல் வேண்டும். என்னை?

தன்னலப்பணியில் விருப்புடைய ஒருவன், என்றும் பிறர் நலம் பேணாது தனிவாழ்வொன்றே நாடிப் பிறரை அடிமைப் படுத்தித் தான் தலைமைப் பேறெய்தவே முயல்வன். அவன் உள்ளத்தை அவா என்னும் பேய் அலைத்துக் கொண்டேயிருக்கும். அப் பேயால் அலைக்கப்படுகிறவன், எக்கொடுமையும் செய்ய ஒருப்படுவன், அவன் நெஞ்சில் பிறர்பொருள் அவாவும், அதையொட்டி வெகுளியும், அழுக்காறும் பிறவும் உலாவிக் கொண்டேயிருக்கும். இத் தன்னலமுடையான் ஆற்றும் பணியைத் தொண்டு என்று எவ்வாறு கூறுவது?

"பிறர் நலங்கருதி உழைப்பவன்பால் தன்னல அவா என்னும் பேய்க்கு என்ன வேலையுண்டு? அவன் உள்ளத்தில் என்றும் பிறர் நலமே ஊறிக்கொண்டிருக்கும். அவ்வன்பனை அவா என் செய்யும்? வெகுளி என் செய்யும்? அழுக்காறு என் செய்யும்? இவையற்ற ஆண்டவன், அவன் உள்ளத்தில் கோயில் கொள்வன். ஆண்டவன் எவ்வாறு கைம்மாறு கருதாது தன் கடனாற்றுகிறானோ, அவ்வாறே தன்னலங் கருதாத பெரியோனும் தன் கடனாற்றுகிறான். இவன்