உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

115

செய்யும் பணியையும் மற்றவன் செய்யும் பணியையும் பொதுப் படத் தொண்டென்று கொள்வதோ? ஆகவே பிறர் நலப்பணியே தொண்டென்று கோடல் வேண்டும்.

'தன்னலங்கருதாத் தொண்டே யாண்டும் பரவினால் உலகில் கொடுமை ஏது? நடுக்கம் ஏது? கவலை ஏது? உலகில் வாழும் ஒவ்வொருவரும் நாம் பிறர்க்குத் தொண்டு செய்யவே படைக்கப் பட்டோம் என்று நினைத்துத் தங்கடனாற்றினால், உலகம் தெய்வலோகமாக வன்றோ மாறும்? உலகில் தோன்றிய சமயாசாரியர் பலரும் இத்தொண்டையே அறிவுறுத்திச் சென்றனர். எச்சமயத்தை எடுத்து ஆய்ந்தாலும் அதன்கண் தன்னல மறுப்பும், பிறர் நலச்சேவையும் பேசப்படுதல் காணலாம். சமயங்கள் பலவாகக் காணப்பட்டாலும் அவற்றின் ஊடே தொண்டெனும் ஒருபெருஞ் சமரசம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பலமதங்கள் என்று பன்மையாகக் கூறுதற்குப் பதிலாகத் தொண்டு மதமென்று அவற்றை ஒருமைப்படுத்திக் கூறலாம். அத்தொண்டை மனிதன் மறந்தநாள்தொட்டு, முனைப்புப் பெருக்கெடுத்து உலகை அரித்து வருகிறது.

தொண்டு-சிறப்பியல்

இக்குறிப்புகள் தொண்டின் பொதுவியல்! சிறப்பியல் என்ன? “எவருடைய வாழ்க்கையில் அறிவு படிப்படியே வளர்ந்து எவ்வுயிரும் பொதுவென்னும் தெளிவு தோன்றித் தம் உயிரே பிறவுயிரும் என்னும் உணர்வுபொங்கித் தொண்டு செய்யும் அன்புச்செல்வமாகிய அந்தண்மை அமைகிறதோ அவர் வாழ்க்கை வெற்றியுடையதென்றும், மற்றவர் வாழ்க்கை தோல்வியுடைய தென்றும் எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அநுபவம் முதலியன எனக்கு உணர்த்துகின்றன.

2

திரு.வி.கவுக்கு உணர்த்திய, தொண்டு செய்யும் அன்புச் செல்வமாகிய அந்தண்மை வளர்ந்ததோ? நிறைந்ததோ? நிலைத்ததோ?

"பலதிறத் தொல்லைகளிடை என் வாழ்க்கை வளர்ந்தது. ஆனால் அது பொருட்பெருக்கில் புரளாததாயிற்று. தொண்டின் பெருக்கில் புரள்வதாயிற்று. வாழ்க்கையின் அடைவு பொருட் பெருக்காயின் என்னுடையது தோல்வி எய்தியதாகும்; தொண்டாயின் அது வெற்றி எய்தியதாகும். தொண்டின் சேய் எது? அந்தண்மை.