உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தொண்டு, அந்தண்மை ஊற்றைத் திறந்தது. அந்தண்மை அருவியாய் டுகிறது. அது வெள்ளமாதல் வேண்டும். எனது வாழ்க்கை ஒரோவழி அந்தணச் செல்வத்தைப் பெற்றது. அவ்வந்தணச் செல்வம் முழுநிலை எய்தும் முயற்சியில் எனது வாழ்க்கையின் எஞ்சிய பகுதியும் ஈடுபடுமாறு ஆண்டவன் அருள் சரப்பானாக”.

"இப்பிறவியில் எனது வாழ்க்கை அந்தணச் செல்வம் பெறுதற்குத் துணை நின்றகல்வி கேள்வி கட்கும், நல்லிணக் கத்துக்கும் இல்வாழ்க்கைக்கும், இயக்கங்கட்கும், பிறவற்றிற்கும் எனது வாழ்த்து உரியதாக."3

"யான் பிறப்பை வெறுக்கின்றேனில்லை; அதை விரும்பு கிறேன். தொண்டுக்குப் பிறவி பயன்படல் வேண்டும் என்பது எனது வேட்கை. எனது வேட்கை ஒருவாறு நிறைவேறியே வருகின்றது.

"இளமையில் என் தொண்டு காமியத்தில் (பற்றில்) சென்றது. பின்னே அது நிஷ்காமியமாக (பற்றின்மையாக) மாறியது, அம்மாற்றம் எப்படியோ உற்றது நல்ல நூல்களும் பெரியோர் சேர்க்கையும் இல்வாழ்க்கையும் இயற்கை இறையின் அருளும் மாற்றத்திற்குக் காரணம் என்று கூறுவேன்.

"தொண்டுக்குரிய பிறப்பை யான் தாங்க அருள்புரிந்த என் தாய் தந்தையர்க்கு யான் என்ன கைம்மாறு செலுத்த வல்லேன்? அவர்களை மனமொழி மெய்களால் வணங்குகிறேன். இவ்வணக்கம் போதுமா? வேறு காண்கிலேன்!" என் செய்வேன்! பெற்றோர் அன்புக்கு ஈடுசெய்யும் பொருள் எவ்வுலகில் உண்டு? இவ்வாழ்க்கை வாழ்க; வெல்க! இல்வாழ்க்கையை வாழ்த்த வாழ்த்த என் மனம் குளிர்கிறது!

தொண்டின் விளக்கம்

தம் வாழ்க்கைக் குறிப்பைத் தொண்டிலே தொடங்குகிறார்! அத் தொண்டை முன்னிறுத்தியே தொடர்கிறார்! அத் தொண்டி லேயே நிறைவுறுத்தவும் செய்கிறார். இதன் விளக்கம் என்னை?

‘தொண்டின் விளக்கமே' வாழ்க்கைக்குறிப்பு என்பதாம்! தொண்டின் பயன்தானும், தம்மைச்சாரத், தாம் ஏற்பரோ?