உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

117

'காணார் கேளார் கால்முடமானோர், பேணாமாந்தர் பிணி நோயுற்றோர் யாவரும் வருக; ஆபுத்திரன்கை அமுதசுரபி இஃது" என்று புகலும், 'புகழும் வேண்டாப் புகழமைந்த' மணிமேகலை யார் அனைய தொண்டர், தொண்டின் பயனை ஏற்பரோ? முனைப்பின் மூலவேரையும் முழுதறுத்தவர்க்குப் புகழ்ப்பயன் ஒரு பயனோ? காண்பார் காண்பாராக! கருதுவார் கருதுவாராக.

1. திருப்பத்தூர் தாலுக்கா 1-வது தொண்டர்மகாநாடு, 1924ஆம் ஆண்டு சனவரி மாதம், 19,

20 ஆம் நாள்கள்.

2.வா.கு (வாழ்க்கைக் குறிப்புகள்) பக். 6.

3. QUIT. §. 986...

4. அ.வா.கு.19.