உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

ஆய்வு நூலை விழாவில் வெளியிட வேண்டும் என்ற எங்கள் விழைவைத் தெரிவித்தவுடன்; அகம் மலர அக்டோபர் முதல் வாரத்தில் நிறைவு செய்து அனுப்புகிறேன் என்றார்.

என்ன ஏமாற்றம்!

நூல் செப்டம்பர் கடைசி வாரத்திலேயே கிடைக்கும்படி அனுப்பி விட்டார்.

இது அவர்களுடைய அருமைக்குரிய செல்வனான எனக்கு அவர்கள் செய்த ஆக்கத்துணை - ஊக்க உணர்வு- ஒரு உந்து சக்தி!

நுழைவு வாயிலில்முதலடி வைத்த எங்கள் இலக்கியப் பணியும் பயணமும் தொடர்ந்து நடந்திட வேண்டும் என்ற ஆசையின் காரணமாகப் பல்கலைப்புலவர் கா.சு. அவர்களுடைய நூற்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்து வெளியிட எண்ணு கிறேன்.எங்களுடைய எண்ணம் திண்மை பெறவும், வண்ண முறவும் எங்களுக்கு என்றும் உள்ள தோன்றாத்துணை இளங்குமரன் அவர்களே ஆவார்.

கா.சு.அவர்களின் சிந்தனை வடித்த செந்தமிழ்ப பனுவல் 'தமிழர் சமய'த்தின் அகவை நாற்பத்தாறு ஆண்டுகள். நாற்பத்தி ஆறு ஆண்டுகள் - அரை நூற்றாண்டுக் கால சிந்தனை. அது இன்னமும் தமிழ் மண்ணில் தவழக்கூட இல்லை என்பதைவிட அது தளிர் விடுவதற்கான எந்த முயற்சியுங்கூட இந்த நாடு -மக்கள் எடுக்கவில்லை என்பது எமக்குள்ள வருத்தம் ஆகும்! எமது வருத்தம் தணிக்க வந்த வான் மழையாகத் - தேன் மழையாக வாய்த்துள்ளது. அவர் தந்த ஊக்க உணர்வுகள் தமிழ் உணர்வைத் தூண்டும் ஊற்றுக் கண்ணாக வேண்டும். 'தமிழர் சமயம் கா.சு,வின் கனவு பேராறாய்ப் பெருக்கெடுத்து தமிழ்நிலத்தை வளப்படுத்தவேண்டும் - வளப்படுத்தும் என்று நம்புகிறோம்!

பேராசிரியர்கள், பல்கலைப் புலவர்கள், கல்லூரிகள்! பல்கலைக் கழகங்கள் பாட நூலாக - ஆய்வு நூலாக இதனை ஆக்க மேற்கொள்கிற முயற்சி தமிழின் உயர்வுக்குச் செய்கிற தொண்டாகும். எங்கள் நம்பிக்கை வெற்றி பெறச் செய்யும் நற்பணியாகும்!