உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

147

"தாய்மொழி வளராத நாடு, ஒரு நாளும் உரிமை பெறாது. தாய்மொழி நாட்டம் உரிமை நாட்டமாகும். உரிமைக்கு முதற்படி தாய்மொழி யோம்பும் முயற்சி. தமிழ் நாட்டார் தாய்மொழி மீது கருத்தைச் செலுத்துவாராக.29"

நாற்றும் நடவும்

பயிரிலே, நெற்பயிர் உண்டு. புற்பயிரும் உண்டு. நெற் பயிராகவே இருப்பினும் அது நாற்றங்காலிலேயே நன்றாக வளமுற வளர்தல் வேண்டும். நாற்றங்காலில் வளமுற வளராத பயிர் அங்கே பூச்சியரித்தும் நோய் பற்றியும் ஊட்டமின்றியும் நலிந்தும் நசிந்தும் வளரும். நெற்பயிர் நடவு நிலத்தில் நன்றாக வளருமோ? அந் நடவு நிலந்தானும் பண்பட உழாததாய், ஊட்டமிக்க உரமிடாததாய், நீர் வளங்குன்றியதாய் இருக்குமேல் பயிர் விளைவு என்னாம்?

-

நாற்றங்கால் போன்றவை கல்விநிலையங்கள்: பயிர் போன்றவர் மாணவர். நடவு நிலமாக இருப்பது நாட்டியலில் அவரவர் மேற்கொள்ளும் பணித்துறை. 'இளமையில் கல்' என்னும் மணிமொழி சுரந்து பெருக்கெடுக்க வேண்டிய இடம் கல்வி நிலையங்களேயன்றோ! அங்கே தமிழ்க்கல்வி நிலை எத்தகையது என்பதை ஆய்கிறார் திரு.வி.க. அவர்களுக்கு அறிவு கொளுத்து கிறார்.

"நானும் ஏறக்குறைய 15 ஆண்டுகள் உங்களைப் போன்ற மாணாக்கர்களிடத்தில் நன்கு பழகிச் சில கல்லூரிகளில் ஆசிரிய னாகவும் இருந்ததுண்டு. அதிலிருந்து பெற்ற அடைவு என்ன வெனில், நம்முடைய நாட்டில் இளைஞர்களுக்குப் பெரிதும் தாய்மொழியினிடம் பற்று இல்லை என்பதே. அவ்வுண்மையைக் கண்டே. சர்வகலாசாலையார் சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் கட்டாயப்பாடமாக இருத்தல் கூடாது. அதை இஷ்டபாடமாகச் செய்தல் நலம் என்று நினைந்து அவ்வாறே செய்திருக்கிறார். எனவே இளைஞர்களாகிய உங்களுக்குத் தமிழினிடத்தில் வேட்கை இல்லையெனில், வேறு எப்பொருளிடத்து உங்களுக்கு வேட்கை உண்டாகும் என்று நீங்களே ஆராய்ந்து பார்த்தல் வேண்டும்.

பிறர் தொண்டு

"நம்மவர்க்குள் ஆங்கிலம் படித்தவர் பலர் தொல்காப்பியம் அறிந்திலர்.ஆனால் பிஷப் கால்டுவல் அந்நூலைப் பயின்று ஆராய்ந்து