உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம் -25

அதன் நுட்பங்கள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி யிருக்கிறார். மாணிக்க வாசகருடைய திருவாசகத்தின் உள்ளுறையை ஆங்கிலம் பயின்ற நம்மவர் அறிய விரும்பும் போது டாக்டர் போப்பினுடைய மொழி பெயர்ப்பைத் தேடிப்பார்க்கிறார். நம்மாழ்வார் திருவாய் மொழியின் கருத்தை அறிய வேண்டு மானால் சிலர் ஆங்கில பொழிபெயர்ப்பைத் தடவுகிறார். இன்னும் திருவள்ளுவர் திருக்குறளை நேராகத் தமிழில், ஆங்கிலம் பயின்ற தமிழர்களிற் பலர் படிக்கிறாரில்லை.நம் நாட்டுப்பெரியோர்கள் அருளிய உண்மைகளைத் தாய்மொழிவாயிலாக உணரும் ஆற்றலையும் வன்மையையும் இழந்து, அவைகளை வேறு மொழி வாயிலாக அறிந்துகொள்ளும் நிலையை நாம் அடைந்திருக் கிறோம்"

"30

இவ்வாறு சுட்டிக்காட்டும் திரு.வி.க. பிறமொழிப் பெருமக்கள் தாம் பிறமொழிகளை அறிந்திருந்தும் தம் தாய்மொழி வழியாகவே அரிய நூல்களை இயற்றி வழி காட்டிய சிறப்பை எடுத்துக் காட்டுகிறார்.

தாய்மொழிமேல் பற்று

"தாகூர் கீதாஞ்சலியை முதல்முதல் ஆங்கில மொழியில் எழுதினாரா? அல்லது தாய்மொழியாகிய வங்க மொழியில் எழுதினாரா? முதல் முதல் வங்கத் தாய் மொழியிலேயே அவர் அதை எழுதினார். பின்னர் அவரே அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்."

"தேச பக்தியிற் சிறந்த பாலகங்காதர திலகர் ஆறு ஆண்டு சிறைக் கோட்டம் நண்ணிய காலத்தில், 'கீதாரகசியம்' என்னும் அரிய நூலை ஆங்கிலத்திலா எழுதினார்? அவரும் முதலில் அதைத் தமது மொழியாகிய மஹாராஷ்டிர மொழியிலேயே எழுதினார். ஏன்? அவர் நாட்டின் மொழியை வளர்க்க வேண்டு மென்ற ஆர்வத்தினாலே அக் கடனாற்றினார்."

66

"இவ்வளவு ஏன்? இவ்வுலகம் போற்றும் மகாத்மா காந்தி 'எங்இந்தியா' பத்திரிகையில் எத்துணையோ கருத்துக்களை நேராக ஆங்கிலத்தில் எழுதிவந்தாலும் தம் வாழ்க்கை வரலாற்றை மட்டும் அவர் தாம் பிறந்த நாட்டின் மொழியாகிய கூர் ஜரத்திலன்றோ எழுதுகிறார்? பின்னைத் தேசாய் என்பவர் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருகிறார்." காலக்கண்ணோட் டத்தில் தமிழின் நிலையைக் கணித்துக் கூறுகிறார் திரு.வி.க.