உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

169

"சிறியேன் தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபட்டுத் தொண்டு புரிந்த காலத்தில் 1921 ஆம் ஆண்டில் நேர்ந்த ஆறு திங்கள் பெருங்குழப்பத்தில் கத்திகளிடையும் குண்டுகளிடையும் நுழைய நேர்ந்தபோதும் எனது உள்ளத்தில் கலித்தொகையும் திருக் கோவையும் இன்முகங்காட்டி மறைவதுண்டு. அத்தகைக் கலித்தொகையும் திருக்கோவையும் வேறு மொழி நூல்களாக இக்காலத் தமிழ்மக்களுக்குத் தோன்றுகின்றன. இக்காலமன்றோ வறுமைக்காலம்.

1918 இல் தேசபக்தன் ஆண்டுமலரின் ஒரு கட்டுரை யாயுருப் பெற்றது. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும். 1921 இல் ஐம்பத்தொரு பக்கங்கொண்ட ஒரு சிறு நூலாக முதல் முதல் வெளியிடப்பட்டது. அதன் இரண்டாம் பதிப்பில் ஏறத்தாழ ஐந்நூறு பக்கங் கொண்ட விரிந்த நூலாயிற்று.20 அதன் பிற் பதிப்புகளிலும் செய்திகள் இடை இடை விரிந்தன. அதனால் தொகை, வகை, விரி என்னும் மூவிலக்கணமும் முழுதமைந்த தாரு நூல், "மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்” என அமைவோம்.

பெண்ணின் பெருமை

ஒரு நூலை இயற்றுவார்க்கு ஒரு நிறைவு ஏற்படுதல் வேண்டும். அந் நிறைவு யாது? அவர் இயற்றிய நூலால், அவர்தம் நோக்கு நிறைவேறியிருத்தல் என்பதாம். அதுவும், பிறர் பகுத்தாய்ந்து கூறுவதினும், அந் நூலாசிரியர் தம் வாழ்விலேயே கண்டு களிப்புற வாய்ப்பது தனிப்பெருஞ் சிறப்பாம். அத்தகு சிறப்பினைத் தந்த அருமை நூல் பெண்ணின் பெருமை என்பதாம்.

"பெண்ணின் பெருமை" என்ற நூலை எந்நோக்குடன்

இயற்றினேனோ அந்நோக்கு நிறைவேறியே வருகிறது. அந்நூல் ஒருபெரும் அறப்புரட்சியை நுண்மையாகச் செய்து வருதல் கண்கூடு. அப் புரட்சியை இப்பிறவி காணும் பேறு பெற்றது. பெண்ணின் பெருமை என் வாழ்க்கையில் ஒருவித வெற்றியை விளைத்ததென்று நினைக்கிறேன். பெண்ணின் பெருமை பிறங்கப் பிறங்க நாடு விடுதலை யடைதல் ஒருதலை. இது வாழ்க்கைக் குறிப்பில் உள்ளது. (139).

பெண்ணின் பெருமையின் எட்டாம் பதிப்பின் முகப்பு இந்நூல் செய்த அறப்புரட்சியை விரித்துரைக்கின்றது: