உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

171

திருக்குறளை ஓர் இனிய குளிர் தருவாகக் காண்கிறார் திரு.வி.க. "திருக்குறள், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்னும் விதையினின்றும் எழுந்த ஓர் இனிய குளிர்தரு.

முதற்பாட்டு விதை. பாயிரம் முளை. அறம் பொருள் இன்பம் என்னும் முப்பாலும் கவடுகள். இயல் அதிகாரம் முதலியன, கோடு துணர் முதலியன. திருக்குறள் நூல் தரு என்பது அது.2"

முதல் நான்கு அதிகாரங்களையும் பாயிரமாகக் கொண்டு (நானூறு பக்க அளவில்) உரை விரிகிறது. அதிகாரத்திற்கு நூறுபக்கமேனி.

இல்வாழ்க்கைமுதல் இன்சொல் ஈறாம் ஆறு அதிகாரங் களும் இல்வாழ்க்கை இயலாய் 380 பக்கமாக உரை விரிகிறது. அதிகாரத்திற்கு ஏறத்தாழ அறுபத்து நான்கு பக்கமேனி.

இளமையில் உரையியற்றுதலில் ஈடுபட்டிருப்பின் நலமெனத் தோன்றுதலுண்டு. ஆயின் அவ்விளமையில் உரை இயற்றப் பட்டிருப்பின், இந்நாளில் அமைந்த முறையில் விரிவுரை அமையுமா? என்றும் ஐயம் அவருக்கே உண்டு."

திருக்குறள் விரிவுரை தமிழ் மண்ணைத் தளிர்க்கச் செய்தது. அம்மட்டோ! தமிழ் கற்ற செருமானிய அறிஞர் கெய்தான் உள்ளத்தைத் தழுவியது! உணர்வைத் தூண்டியது. அத்தூண்டல் வாளா அமையாமல் திருக்குறள் விரிவுரைப் படைப்பு நாயகரைப் பெர்லின் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் பேராசிரியப் பணியேற்க வேண்டி நின்றது. “யான் என்ன பதிலிறுத்தேன்?" மறுபிறப்பில் என்று பதிலிறுத்தேன்”2 என்பது திரு.வி.க. வைத்த முற்றுப்புள்ளி.

திரு.வி.க.தம் நூல்களுக்கும் பிறர் நூல்களுக்கமாக எழுதிய அணிந்துரை முன்னுரை முதலாயவற்றைத் தொகுத்து அடைவு செய்துவெளியிட அவர்க்கே ஒரு கருத்து இருந்தது. அப்பணி இன்றேனும் செய்தற்குரிய சீர்மையுடையதே. அவர் எழுதிய அணிந்துரைகளுள் ஒன்று அறிஞர் மு.வ. எழுதிய திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கத்திற்கு உரியது.

பதினெட்டுப் பக்க அளவில் விரியும் அவ்வணிந்துரை, நூலையும் உரையையும் பற்றிய அரிய பிழிவாகவே அமைந் துள்ளது.திருக்குறள் சரங்கமாதலையும், மு.வ.திருக்குறட் சுரங்கத்தில்