உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

இருந்து அகழ்ந்து அருமணி எடுப்பவராதலையும்

தெழுதும் அருமை கருதத்தக்கது:

ணைத்

"திருக்குறள் ஒரு சுரங்கம். அஃதுஅவ்வக்கால உலகைப் புரக்கும் பொருள்களை அவ்வப்போது வழங்கும் பெற்றியது. அதனின்றும் இதுகாறும் அறிஞரால் எடுக்கப்பட்ட பொருள் சிலவே. மிகச்சிலவே. இவ்வேளையில் திரண்டுவரும் புது உலகமும், னித் திரளப்போகும் பலவகை உலகங்களும் ஏற்கத் தக்க பொருள்கள் இன்னும் திருக்குறளில் மிடைந்து கிடக்கின்றன. திருக்குறட் சுரங்கம் வற்றாதது" என்பது எடுப்பு (10)

'ஆசிரியர் வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கி மூழ்கிப் பலதிற மணிகளைத் திரட்டிக் கொணர்ந் தவர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடி உறவாடிப் பண்பட்டது. அந்நெஞ்சினின்றும் அரும்பும் கருத்து சிந்தனைக்குரியதே" என்பது முடிப்பு (14)

முருகன் அல்லது அழகு

இயற்கை இன்பத்துக்கென்று யாக்கப்பெற்ற நூல் முருகன் அல்லது அழகு. அதில் காவியம் ஓவியம் இசை அழகு ஆய்வை நடம்புரிதல் கண்கூடு.

முருகன்

.

முருகு

என்பவற்றைத் தமிழர் எவ்வணம் கொண்டனர்? "இயற்கை உடல்; அதன் உள்ளுறை உயிர்; உயிரை முருகு அல்லது முருகன் என்று தமிழ் நாட்டார் கொண்டனர். "முருகை மணமும் இளமையும் கடவுட்டன்மையும் அழகுமுடைய செம்பொருளாகக் கொண்டனர்." காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரனுக்கு விடுத்த, ஒரு கட்டுரை முருகன். அம் முருகனே, மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் போல் பெருக் குற்றான். அதன் பன்னிரண்டாம் பதிப்பு 1982 - இல் வெளிவந்துள்ளது. நூலுருக்கொண்ட சிறிய முதற்பதிப்பு 1925-இல் வெளிவந்தது.

முருகு வழிபாட்டை நூல்வழிபாடாகத் திரு.வி.க. நாட்டு கிறார்: "இயற்கை என்னும் எனது ஆருயிர் அன்னைக்கும், அவ் வியற்கையை விடுத்து என்றும் நீங்காத அழகு என்னும் அப்பனுக்கும் இந்நூலைக் கோயிலாக்கித் தமிழ் மலர் தூவி ஒல்லும் பகைவழிபாடு' நிகழ்த்தினேன் என்கிறார் (நூன்முகம்).

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பென்ன? அவனை வாழ்த்தத்தக்க மொழியாது?" முருகன் எல்லா மொழிகட்கு முரிய