உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

173

இறைவன்.ஆயினும் அவனது வடிவாகிய இயற்கையின் இனிமையே தமிழ் என்னும் ஒரு மொழியாக நிலவுகிறது. இம் மொழியால் அவனைப் போற்றுவதும் பாடுவதும் சிறப்புடைமையாகும். பண்டைத்தமிழர் இயற்கைவாழ்விலேயே தோய்ந்து கிடந்தவர்.

"இயற்கை அவர்க்கு இனிமையூட்டியிருக்கும். அந்நாளில் இனிமை என்பது 'தமிழ்' 'தமிழ்' என்று வழங்கப்பட்டு வந்தது. யற்கை இனிமையைத் தமிழ் என்று கொண்ட அப் பழைய மக்களிடை இயற்கைப்பொருள் வேற்றுமை குறிக்கவும், வேறுபல வாழ்வுத்துறை குறிக்கவும் சொற்கள் அரும்பியபோது அவர்கள் அச் சொற்கட்கும், அச்சொற்களாலாகிய மொழிக்கும் இயற்கை இனிமையனத் தாங்கள் 'தமிழ்' என்று வழங்கி வந்த வழக்கத்தை யொட்டியே 'தமிழ்' என்னும் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

"இயற்கை, முருகன் உடல். இயற்கைத் தமிழை (இனிமையை) என்னென்று சொல்வது? இயற்கை முருகனைத் தமிழ் முருகன் என்று கூறல் பொருந்தும். ஆகவே முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு கூர்த்த மதியால் உன்னத்தக்கது."

"தமிழ் முருகனைத் தமிழாலன்றோ போற்றுதல் வேண்டும்? ஏத்துதல் வேண்டும்? பாடுதல் வேண்டும்? முருகனடியார் பலர் முருகனைத் தமிழ்ப்பாமாலையால் அணிசெய்து செய்து அன்பால் குழைந்து குழைந்துருகினர். இரும்பு நெஞ்சைக் குழைக்குந் தன்மையும், வெம்மையுளத்தைத் தணிக்கும் தண்மையும் இன்பத் தமிழுக்கு உண்டு.24

இந்தியாவும் விடுதலையும் முதலியன:

இனித் தொழிலாளர் இயக்கத்தைத் தேங்கவைத்துள்ள இடம் இந்தியாவும் விடுதலையும். இளந்தைப் பருவத்தர் எழுச்சி வாழ்வுக்கெனக் கலைக்கழக மேடைகளில் பொழிந்தது இளமை விருந்தாம் சீர்திருத்தம். உலகியலாக விரிந்த பார்வைக்கும், கிறித்து பெருமான் மறைமொழிச்சுரப்புக்கும் பாதிரி மதத்துக்கும் உண்மைக் கிறித்துவத்துக்கும் உள்ள வேற்றுமை விளக்கத்துக்கும் வைப்பகமாம், முடியா? காதலா? சீர்திருத்தமா? தம் வரலாற்றுக் குறிப்பாகவும், தமிழகச் சான்றோர் பலர் தம் வாழ்க்கைக் குறிப்பு களின் உறையுளாகவும் விளங்கும் வாழ்க்கைக் குறிப்புக்கள் ஆகிய இன்னவெல்லாம் விரிந்த நூல்களாம். இனிச் சிறு சுவடிகளும், பாடல் நூல்களும் உருவால் சிறியவை எனினும் உணர்வாலும் உள்ளுறையாலும் பெரியவை என்பது வெளிப்படை.