உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

பொதுமை வேட்டல்

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

செய்யுள் நூல்களுள் ஒன்று பொதுமை வேட்டல். திரு.வி.க அவர்களின் உள்ளம் எத்தகையது என்று ஒரு நூலால் அறிய வேண்டின் அது பொதுமை வேட்டல் என்னும் நூல் என்பார் மு.வ. தெய்வநிச்சயம் முதல் போற்றி ஈறாக 44 தலைப்புகளில் இயல்வது அது.

25

"உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல்" என்னும் நூலில் ஒரு பாடல் தமிழின் பெருமையையும் தமிழர் சிறுமை யையும் மிக எளிமையாய் உரைக்கின்றது.

“தமிழினைப்போல் உயர்ந்த மொழி தரணியில்வே றெங்குமிலை தமிழனைப்போல் மொழிக்கொலையில் தலைசிறந்தோர் எவருளரே”

என்பது அது.

பொருளும் அருளும் முதலியன:

மார்க்சியச்சாரம் பிழிந்து காந்தியத் தேன்கலந்த நூல் பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும்.

“என்பொருட் டுலகில் வாழ்தலுக் கிசையேன்

எழிலுடல் ஓம்பலும் வேண்டேன்

மன்பதைக் குழைக்க மாணுடல் வேண்டும்"

என்று சென்னிமலை முருகனிடம் பன்னுகிறார் திரு.வி.க. இது, முருகன் அருள்வேட்டல்.

“என்னுள்ளே நீபிறந்தாய் ஏசுபெருமானே உன்னுள்ளே யானிருந்தேன் உற்று”

என்பது 'கிறிஸ்துவின் அருள்வேட்டல்' (1:8) தம்முள் இறைபுகப் பெறுதலே, இறையுள் தாம் புகுதல் என்பதை எளிமையாயும் அருமையாயும் காட்டும் காட்டாக்கலை விளக்கம்! குறள், கட்டளைக்கலித்துறை, கலித்தாழிசை, எண்சீர் விருத்தம், எழுசீர்விருத்தம், அறுசீர் விருத்தம், கண்ணிகள் என்னும் எழுவகை யாப்பால் எண்பது பாடல்களால் இயல்வது அது.

உயிரின் விடுதலைக்குரிய வழிகள் பலவுண்டு. அவற்றுள் ஒன்று சிறந்த ஒன்று சித்தந்திருத்தல் அல்லது செத்துப் பிறத்தல். இதனை விளக்கும் நூல், சித்தந்திருத்தல் அல்லது செத்துப் பிறத்தலாம்.