உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ்வளம் -25 வண்ணிப்பு நடை

நீலவானமும் வெண்திங்களும் மாங்குயிலும் நீல மஞ்ஞையும் அழகிய மலரும் விரைக்கொடியும் அருவி கொழிக்கும் மணிகளும் பிறவும் ஒருங்கு திரண்டு பெண்ணெனப் பொலிதல் காணலாம். Qu.au. 271.

(வண்ணிப்பு - வருணிப்பு) வழிமொழி நடை

எனது வாழ்க்கை வரலாற்றை முறைமுறையே கிளந்து கூறப்போகின்றேனில்லை. அதைக் கிளந்து கூற யான் எண்ணியதே இல்லை.எண்ணியிருப்பேனாயின் நாட்குறிப்பை நிரலே பொறித்து

வைத்திருப்பேன்.

(வழிமொழிதல், மீளவருதல்)

வாழ்த்து நடை

வா.கு.: 8

பனிகொழிக்கும் கையும் ப்ாகொழிக்கும் நாவும் உடைய

தமிழ் அன்னையர் வாழ்க! வாழ்க! நீடுவாழ்க.

வியப்பைய நடை

செம்பரப் பாக்கத்து ஏரியைக் கண்டே,

"ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்"

QUIT.. 194.

என்று அப்பர் பாடினரோ என்னவோ தெரியவில்லை.

(வியப்பையம் வியப்பும் ஐயமும்)

விளிநடை

வா.கு. 12.

வானமே! நீலநிறத்தை எப்படிப் பெற்றாய்? அஃது உண்மையா,

கடலே! நீ ஏன் பரந்து விரிந்து கிடக்கிறாய்? ஏன் ஆழியாய் இருக்கிறாய்?

நடை

வா.கு:120

'வினாமேல் வினா அடுக்குநடைக்கு' நிரல்நிரல் விடை