உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

205

கடவுள் உங்களை ஏன் உலகிற்கு அனுப்பினார்? பிஞ்சில் பழுத்து உதிரவா? நோய்வாய்ப்பட்டு வருந்தவா? அண்ணன் தம்பி உற்றார் உறவினர் சீ சீ என்று ஏசி ஏசி உங்களை ஒதுக்கவா?

அன்று! அன்று!

நீங்கள் தாயாதல் வேண்டும்; நல்வாழ்வு எய்தல் வேண்டும்; பேரின்பம் அடைதல் வேண்டும் என்பது ஆண்டவன் நோக்கம். Qu.Qu. 80-1

(பலவினாக்களுக்கு நிரலே பலவிடை)

வினாமேல் வினாநடை

பெண் மனங்கொள்ளா மணம் மணமா? என்று வினவுகிறேன்.

திருமணம் என்பது நகையா? இசையா? பந்தரா? மாலையா? கூட்டமா? விருந்தா?

மனம் ஒன்றாத இடத்திலே மணமேது மகிழ்வேது?

(பல வினாக்கள் தொடர்தல்)

வினாவிடை நடை

அழகு எதன் வாயிலாக உணரக்கிடக்கிறது?

Qu.Qu. 236.

அழகு தன்னையுடைய இயற்கை வாயிலாக உணரக் கிடக்கிறது.

அதற்கம் இதற்கம் உள்ள தொடர்பென்ன?

அழகுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை என்னென்று

கூறுவது?

இயற்கையினூடே அழகு நீக்கமின்றி விராவி நிற்கிறது.

மு.அஅ:15

வினாவுக்கு விடை வினாநடை

(திருட்டில்) பங்கு உண்டா? இல்லையா? நேரே செய்தா

லென்ன? துணை போனாலென்ன?

(வினாவுக்கு விடையும் வினாவாகவே இருத்தல்)