உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ்வளம் -25

வினைமாற்றநடை

கத்தரி இடப்பட்டது.

வா.கு.224.

(கத்தரியின் வேலை துண்டாக வெட்டுதல், இவண் நட்பைக்

கெடுத்ததைக் குறித்தது)

வேறுபாட்டு விளக்கநடை

காதல் மாறாதது; காமம் மாறுவது.

காதல் கடவுள்; காமம் பேய்.

காதல் இன்பம், காமம் துன்பம்

காதல் அன்பென்னும் தன்மையினின்றும் பிறப்பது. காமம் அவாவென்னும் வெம்மையினின்றும் பிறப்பது. காதல் உடலை வளர்க்கும்; காமம் உடலை எரிக்கும். காதல் உடல் மனம் அறிவு என்னும் மூன்றினும் ஊடுருவிப் பாய்ந்து நிலைத்து நிற்கும்.

காமம் உடலளவில் எழுந்து விழ்ந்துபடும். காதல் நாளுக்கு நாள் பெருகுந்தன்மையது; காமம் நாளுக்குநாள் அருகுந் தன்மையது.

பெ.பெ. - 253

'நடை' என்பது பலபொரு ளொருசொல். நடத்தலையும், ஒழுக்கத்தையும் வெளிப்படக் குறிக்கும். அது, மொழி நடையையும் குறிக்கும். மொழிநடையையும் உலகியல் நடை, செய்யுள் நடை எனப் பகுத்தும் காட்டும். ஒரு நடையாகிய ஒழுக்கநடையையும், மற்றொரு நடையாகிய மொழி நடையையும் ஒருங்கு பேணியவர் திரு.வி.க. அவர் வழியே 'மாந்தர்' 'சால்பு' என்பவற்றுக்கு எத்துணை இடமுண்டோ அத்துணை இடம், அவர்தம் 'தமிழ்' உரை நடைக்கும் உண்டு! தமக்கெனத் தனிநடை யமைத்துக்கொண்டு அந்நடையை நடைமுறைப்படுத்துதல்தானே நிலைபேறு. அந் நிலைபேற்றில் தலையாய ஒருவர் திரு.வி.க. என்க.