உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சொற்பொருள் ஆட்சிகள்

'இது செய்யுட்சொல்' என்று சொல்லப்பட்டவற்றையும் பழந்தமிழ் நூல்களில் இடம்பெற்ற சொற்கள் இவை என்பவ ற்றையும் இயல்பான பொதுமக்கள் நடைமுறைச் சொல்லாக்கிக் காட்டியவர், திரு.வி.க. பழஞ்சொல்லில் உள்ள அடியை அல்லது வேரைக்கொண்டு புதுச் சொல்லைப் படைத்துப் புலவரை அன்றிப் பொதுமக்களிடையேயும் பயிலுமாறு வழங்கியவர் அவர்.

அறிவியல் வளர்ச்சிமிக்க காலநிலைக்கு ஏற்பத், தமிழ் வளம் பெற்று ஓங்குதலை எண்ணி எண்ணிக் கலைச் சொல்லாக்கங்கள் கண்டு வழக்கில் உலாவவிட்டவர் அவர். பொதுமக்கள் வழக்குச் சொல்லாக அல்லது உலகியல் சொல்லாக விளங்கி வருவன வற்றையும் புலமையாளர் சொல்லாக வழக்கில் உலாவச் செய்த வரும் அவர்.

வெளிப்படுசொல்லாக நிற்பனவற்றைக் குறிப்பாக வேறொரு பொருள்தரும் உள்ளுறைச்சொல்லாக நயம்பட அமைத்து, நறுமையூட்டியவரும் அவர். இவற்றைச் சிலச்சில சான்றுகளால் சுட்டுவதேஇச்சொற் பொருளாட்சிப்பகுதி என்க.

பழஞ்சொல் மீட்பு:

சோழன் குளுமுற்றத்துத துஞ்சிய கிள்ளிவளவன், சிறுகுடி கிழான் பண்ணனைப் பாடியதொரு புறப்பாட்டு. அப்பாட்டு பாணாற்றுப்படை என்னும் துறையமைந்தது. அதில் பண்ணன் சிறுகுடியைப், பாணன், வழியே வருவாரிடம் அணித்தோ சேய்த்தோ? கூறுமின் எமக்கே என்று வினாவுகிறான். அவ் வினாவை அறிந்த திரு.வி.க. அணித்தோ? சேய்த்தோ? எனச்சில டங்களில் ஆள்கிறார்.

மணிமேசலையில் 'உண்ணாநோன்பி' ஒருவன் காட்சி வழங்குகிறான். அவ் வுண்ணாநோன்பு பழஞ்சொல். ஆயினும், 'உண்ணாவிரதம்' எனப் பலரும் வழக்கில் கொணர்ந்தனர்.