உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இளங்குமரனார் தமிழ்வளம் -25

ஆனால், திரு.வி.க. 'உண்ணா நோன்பு' என ஆட்சி செய்து நிலைப்படுத்தினார்.

'கால்கோள்' என்பது பழந்தமிழ்ச் சொல்; தொல்காப்பி யத்தும் சங்க நூல்களிலும் இடம்பெறுவது. சிலம்பில் கால்கோட் காதை என்பதொன்றுண்டு. அக் 'கால் கோள்' 'கால்கொள்ளுதல்' என்பவற்றைப் பெருவழக்காக்கினார். இப்படி எண்ணற்றவை அவரால் புதுப்பிறப்பு அடைந்தவை.

உன்னுங்கள், அந்தோ, எத்துணை, யாண்டும், நல்குதல், எய்ப்பினில் வைப்பு, விடையிறுத்தல். முகிழ்த்தல் இன்னவை இவ்வழிப்பட்டவை.

புதுச்சொல்லாக்கம் :

நீர் என்பதிலிருந்து நீர்மை தோன்றும். நீர்மையு டையவனை ‘நீரன்' என ஆள்கிறார் திரு.வி.க.

தேர்ந்து கொள்ளுதல், தேர்ந்தெடுத்தல் என்பவை விரிசொல். இச்சொல்லைத் 'தெரித்தல்' என வழங்குகிறார்.

உலகோரைக்குறிக்கும் 'மன்பதை' என்னும் சொல்லைக் குமுகாயம் (சமுதாயம்) என்னும் பொருளில் ஆட்சிக்குக் கொணர் கிறார். காய்தல் என்னும் இருவழக்குச் சொல்லைச் சீறுதல். (சினப்) பொருளில் நடைமுறைப்படுத்துகிறார்.

மருந்து உண்ணும் நோயனை 'மருந்தன்' என்கிறார். அருகில் இருப்பவர் உரிமையுடையவர் என்னும் பொருளில் 'அருகர்' என்னும் சொல்லை ஆள்கிறார்.

செலல், செலவு என்பவற்றை 'நோக்குதல்' என்கிறார். எ-டு. "அவர் இங்கிலாந்து நோக்கினார்" எதற்கு எனப் பெரு வழக்காக வழங்கும் சொல்லை 'எற்றுக்கு' என்று இலக்கியச் சிறப்பூட்டுகிறார். இத்தகைய ஆட்சிகள் பொதுளியுள்

கலைச்சொல்லாக்கம்

சுதந்திரப்போரை 'உரிமைப்போர்' என்றும், சம தர்மத்தைப் 'பொதுவுடைமை' என்றும் ஆட்சிக்குக் கொண்டு வந்தார் திரு.வி.க.

இதழ் நடாத்துதற்குரிய அரசு வைப்புத்தொகையை 'ஈடுகாணம்' என்கிறார்.