உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

209

சிறைச்சாலையில் வைத்தலைக் 'காப்பில்' வைத்தல் என்றும், ஒழுங்கமைந்த மறுமொழியைச் 'செவ்வனிறை' என்றும் பயன் படுத்துகிறார். பொதுமக்களைப் 'பொதுவர்' என்பது வழக்கப் பொருளை விலக்கிய கலைச்சொல்லாகும்.

'Vote' என்பதை 'வாக்கு' என்றும் Psychology என்பதை 'அகத்திணை' என்றும், Budget என்பதை 'வரவு செலவுத்திட்டம் என்றும் வழங்குகிறார்.

இவ்வாறு கலைச்சொல்லாக்கப்பணியிலே அவர்க்குப் பெரும் பங்குண்மை அறியத்தக்கதாம்.

பொதுச்சொல்லைப் புலமைச் சொல்லாக்கல்

இரைச்சல் என்னும் கூச்சல் பொருள்தரும் சொல்லைக் கூறுதல்' என்னும் பொருளில் பயன்படுத்துகிறார்.

குழந்தை நோய்நொடியுற்று மெலிந்து கிடத்தலைச் ‘சவலை' யுறுதல் என்பது வழக்கு. அதனை ஈரல் சவலை யுற்றதென் ஆள் கிறார்.

கடாவல்' என்னும் சொல்லை மறுவினா வினாவுதல் பொருளில் வழங்கிப் பொருட் பெருமை சேர்க்கிறார்.

செவிசாய்த்தல், கருங்காலி, மதர்த்தெழுதல், அணைந்தேன், முகவாய்க் கட்டை இன்னவாறான பல சொற்களை வழக்குக்குக் கொணர்கிறார்.

உள்ளுறை அல்லது குறிப்பு

"ஈக்களுடன் கலந்து சுண்டல் வாங்க என்மனம் ஒருப்படு வதில்லை'. இதில், சிறுபிள்ளைகள் சுண்டல் வாங்குதற்கு ஈக்கள்போல் மொய்த்தலால், ஈக்கள் எனப்பட்டனர்.

வா.கு.63.

"எவரையும் திடீரென மேலே பறக்க யான் விடமாட்டேன்". தணிகாசலர், ஒருமாணவர் முறை முறையேகற்றுச் சிறக்க விடுத்தலன்றி எடுத்தவுடனே பெருநூலைக் கற்க விடுவதில்லை எனக் கொண்ட முறைமையை வெளிப்படுத்துதல் இது.

வா.கு. 99