உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைக் குறிப்பு

1. “தமிழ்க் கா.சு.'

""

'கா.சுப்பிரமணியம் கல்விக் கடல்; ஆங்கிலத்திலும் எம்.ஏ., தமிழிலும் எம்.ஏ., சட்டத்தில் எம்.எல். அவருக்கு எம்.எல்.பிள்ளை யென்று ஒரு பெயரும் வழக்கிலிருக்கிறது.

"பழந்தமிழ் நூல்களின் உள்ளுறைகளை நோக்குதற் கென்று கா.சுப்பிரமணிய பிள்ளைக்கு ஒரு தனிக்கண் அமைந்துள்ளது போலும். அவரிடத்திருந்து பலதிறத் தமிழ்ப் புதுமைகள் பிறக்கும். அவைகளைப் பழைமையென்றே அவர் சொல்வார். அஃதெனக்கு வியப்பாகவே தோன்றும்."

திரு.வி.க. வாழ்க்கைக்

குறிப்புக்களில்

குறிப்புக்களில்

தமிழறிஞர்

சுப்பிரமணியபிள்ளை என்னும் தலைப்பில் வரும் எழுவாய்க்

குறிப்புக்கள் இவை.

அதன் இறுவாய்க் குறிப்புக்கள் "எம்.எல். பிள்ளையின் வாழ்க்கை நீதியுலகுக்குப் பயன்படா தொழிந்தமை அவ்வுலகின் துர் அதிர்ஷ்டமென்றெ சொல்வேன். சட்ட ஞானியைத் தமிழ்ப் பேராசிரியராக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பெற்றுள்ளது. பேராசிரியர் உடல் நலங் குன்றியுள்ளது. அவர் எந்நிலையில் நின்றாலும் எவ்வேடம் கொண்டாலும் மன்னியசீர் சங்கரன் றாளை மறவாத செல்வத்தைப் பெற்றுள்ளது ஒருவித ஆறு தலளிக்கிறது. அச்சங்கரன் தமிழ்த் தொண்டரைக் காப்பானாக'

என்பவை.

பீடும் பெயரும்

தமிழ்க் கா.சு.வின் 'கல் நாட்டு விழாவிலே வெளிப்பட்ட 'சொல் நாட்டு' ஒன்று:'

"பிள்ளையவர்கள் வாழ்க்கையோ ஆடம்பரமற்றது. உள்ளம் குழந்தையுள்ளம்; இடையறா இறையன்புடையது. அவர்கள்