உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

பற்றெல்லாம் பற்றற்றானிடம்தான். உற்றார் உறவினரிடம் அவர் களுக்கு இருந்த பற்றெல்லாம் எண்ணெயும் தண்ணீரும் போல் தான் இருந்ததென்று சொல்ல வேண்டும்.

"இறைபணி, அடியார் பணிகட்கு அடுத்து அவர்கள் ஈடுபட்டது தனித் தமிழ்த் தொண்டிற்றான். தனித் தமிழ்க்கலை, மொழிப்பரப்பு எல்லாம் பொருளற்ற பூசல் எனவும், நிலையா நாகரிகமற்ற கிளர்ச்சி எனவும் தமிழர்களாலேயே எள்ளி நகையாடப்பட்ட அக்காலத்தில் மக்கள் ஏளனத்தைப் பொருட் படுத்தாது, உண்மை என்றும் நிலை பெறும் என்னும் உறுதிப் பாட்டுடன் தனித் தமிழின் உயர்வையும் உயிர்ப்புத் தன்மையையும் ஒல்லும் வகையான் ஓவாதே சொல்லாலும் எழுத்தாலும் பரப்பி வந்த பெரியார் நம் பிள்ளையவர்கள். அவர்களைத் 'தனித் தமிழ் வீரர்' எனின் சாலும்!

66

'என்னை? வீரம், போரிற்றான் என்பது இல்லையே; கொள்கையில் உறுதிப்பாடும் சிறந்த வீரமன்றோ? அந்த முறையில் கொள்கைக்காக வாழ்க்கைச் சிறப்பையும் இழக்கத் துணிந்த பெரியார் பிள்ளையவர்கள் என்றால் அன்னாரைத் தமிழ் வீரர் எனச் சொல்வது ஒரு சிறிதும் மிகையாகாது."

"இவ்வீரத்துடன் எத்தொழிலில் இருந்தாலும் தாம் கண்ட தமிழன் கலை மொழி உயர்வைத் தமிழ் உலகு கண்டு இன்புற்றுத் தன்னுணர்ச்சி பெறுமாறு பிள்ளையவர்கள் இடையறாத் தொண்டாற்றி வந்தார்கள். இன்று தமிழன் ஒரு சிறிதேனும் தன்னுணர்ச்சி பெற்றுத் தலைநிமிர்ந்து எண்ணவாவது செய்கிறான் என்றால், அது தமிழுலகுக்கு அன்று பிள்ளையவர்கள் ஈந்தருளிய பிச்சையின் பயன் எனத் தமிழுலகம் உணர்ந்து அவர்களுக்கு நெல்லையில் கல் நாட்டுதலுடன் அமையாது தமிழ் நாடெங் கணுமே உருவச் சிலைகள் வைத்துப் போற்றுதல் வேண்டும்."

பொற்காசு

(செந்தமிழ்ச் செல்வி 23 : 3)

28-6-1920 இல் திருவரங்கனார்க்குப் பா.வே. மாணிக்க நாயகர் ஓரஞ்சல் விடுத்தார். அதில் தம்மையும் கா.சு.வையும் ஒப்பிட்டுத் தேர்கின்றார்: