உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

17

"வேறுதக்காரைத் தேர்ந்து கொள்வதை விட்டுவிட்டு, தெய்வத் தமிழ் மொழியின் இதுகாறும் மறைந்து கிடந்த உண்மைகள் சிலவற்றை என்னுடைய தகுதியற்ற மூளையில் தோன்றச் செய்வதில் எனது ஆண்டவன் முருகப்பெருமான் ஒரு தலைச் சார்பாகவே இருக்கின்றான் என்று நாம் கருதுகின்றேன். இக்காலத்தில் ஆண்டவன் அருளால் உள்ளுணர்ச்சியுடன் கூடிய நிகரற்ற பெரும் புலவர், கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள். ஆனால் அவர்கள் தம்முடைய பெருமைகளை அறியாதிருக் கின்றார்கள். அதனால் ஒலிப்பன வல்லவாகிய உயர்ந்த உலோகங் களைப் போல அவர்கள் ஆரவாரம் செய்வதில்லை. நானோ மங்கிய உலோகங்களைப் போலத் தமிழ் நாட்டில் பெரிய ஆரவாரம் முழக்கி வருகின்றேன்" என்று எழுதினார்.

மாணிக்கம் போற்றிய மாணிக்கம்

இம்மாணிக்கர்,

(உலோகமா)?

மாணிக்கமா? மங்கிய மாழையா

"எஞ்சினியர் மாணிக்க நாயக்கர் கூர்த்த மதியினர். வேர் அறிஞர். அவர் ஒரு பெரிய ஊற்று. அதனின்றும் புதுமைகள் சுரந்த வண்ணமிருக்கும். நாயக்கர் ஆராய்ச்சிகள் தமிழின் தனிமையை நிலைபெறுத்துவன. அவ்வாராய்ச்சிகளில் மிக மிகச் சிலவே வெளிவந்தன. எல்லாம் வெளிவந்திருப்பின் சரித்திர உலகில் தமிழ்நாடு ஒரு தனிமதிப்புப் பெற்றிருக்கும். தமிழ்நாட்டின் தவக்குறை.

"நாயக்கர் தொல்காப்பியக் கடலை அடிக்கடி கடைவர்; கடைந்து கடைந்து அமிழ்தம் எடுப்பர்; அதை, நீங்கள் ஏற்கிறீர்களா என்று என்னைக் கேட்பர். - இம் மதிப்பீட்டுரை மாணிக்கரைப் பற்றியது. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்களில் இடம்பெற்றது (182) ஆதலால் 'கா.சு.' மாணிக்கம் போற்றிய மாணிக்கம் என்க.

தொல்காப்பியத் தோன்றல்

பரோடா மன்னர் 1915 இல் குற்றாலத்தில் சின்னாட்கள் உறைந்தார். அவரொடு திருவாங்கூர் தீர்வைத்துறை ஆணையர் பி. பொன்னம்பலம் பிள்ளை என்பார்க்குத் தொடர்பு உண்டாயிற்று. அக்காலத்தில் தொல்காப்பியத்தின் அருமை பெருமைகளைப் பொன்னம்பலனார் வழியே மன்னர் அறிந்தார். தம் தலைநகர்