உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம் -25

சென்றதும் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் பெயர்க்கத் தமக்குள்ள அவாவை வெளியிட்டார். அதற்குரிய திட்டங்களைக் குறித்தெழுதுமாறு அமைச்சர் மாதவராவ் வழியே கடிதம் வந்தது. அதற்கு விளக்கமிக்க மறுமொழி வரைந்தார் பொன்னம்பலனார் :

"மொழிபெயர்ப்புடன் முழுப் பொறுப்பையும் ஏற்கத் தக்க சிறந்த முகவர் யார் எனப் பன்னாள் சிந்தித்தும் நண்பர்களை உசாவியறிந்தும் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். திருநெல்வேலியைச் சார்ந்தவரும் போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவருமான உயர்திரு கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ., பி.எல். (அப்பொழுது எம்.எல். ஆகவில்லை; 1917 இல் எம்.எல். ஆனார்) அவர்களே தொல்காப்பியத்தை மொழி பெயர்க்கவும் மற்றைப் பணிகளையெல்லாம் மேற்பார்வையிடவும் தக்கவர் என்று முடிவு செய்துள்ளேன்; "அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.பட்டம் பெறுதற்குத் தமிழ் இலக்கியம் படிக்குங்கால் தமிழின் தங்கை மொழியான மலையாளத்தையும் இரண்டாவது மொழியாக எடுத்துப் பயின்றவர். இவ்வாறு மூன்று மொழிகளில் நல்ல புலமை பெற்றுள்ளார். (பின்னேவடமொழிப் புலமையும் பெற்றார்)" எனக் குறிப்பிட்டு அவர்தம் திறம், உழைப்பு, பரிசு இன்னவெல்லாம் விரித்தெழுதினார். (தொல்காப்பியமும் பரோடா மன்னரும் செந்தமிழ்ச் செல்வியில் வெளிவந்தது.)

.

'கா.சு.' எழுதிய நூல்களே அவர்தம் நுண்மாண் நுழை புலத்தைக் காட்டுமெனினும் இத்தகைய காட்சிச் சான்றுகளும் கருதத்தக்கன அல்லவோ!

இறைமைப் பேறு

தமிழ்க் கா.சு.வின் பல்திறப் பிழிவுச் சுருக்கத்துள் ஒன்று:

"பிள்ளையவர்கள் அறிவுத் துறையில் பேராற்றல் வாய்ந்த வர்கள். அதுபோல் கடவுள் வழிபாட்டிலும் தலை சிறந்தவராவர்; நினைவாற்றல் மிக்கவர்; நேர்மை குன்றாதவர்; அடக்கமும் பணிவும் ன்சொல்லும் எழிலாகவுடையவர்; எளிய வாழ்க்கையினர்; உறுதி யுள்ளத்தர்; நல்லாரிணக்கமே நாடும் நயத்தினர்; கடவுள் வழிபாடு பொதுவாக எல்லார்க்கும் இளமை தொட்டு நிகழ்வதாயினும் சிறப்பாக அமைவது முதுமையிலே யேயாகும். நம் பிள்ளையவர்களுக்கு இளமைப் பருவந்தொட்டே