உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

19

அவ்வழிபாடு சிறப்பாக அமைந்துள்ளது. அவ்வழிபாடொன்றே அவர்களுடைய கல்வி முன்னேற்றத்திற்கும் நினைவாற்றற்கும் பேராசிரியப் பெருநிலைக்கும் பெருந்துணையாக அமைந்துள்ளது." (பேராசிரியர் கா.சு. பிள்ளை வரலாறு பதிப்புரை. பக். 6)”

காசு

கா.சுப்பிரமணியனார், 'கா.சு.' எனச் சுருங்கிய வடிவில் குறிக்கப்படுவார். 'கா.சு.' - பொன்: பொற்காசு! "வாசி தீரவே காசு நல்குவீர்" என்பது தேவாரம்.

"கோபத்தன்ன தோயாப் பூந்துகிலில் பல் காசு நிரைத்த” பான்மையை முருகாற்றுப்படை தெரிவிக்கும்.

கா.சு.பொன்னால் ஆயது என்பதைப் 'பொலங்காசு' என்னும் ஓர் அகப்பாட்டு (269), 'மணிக்காசு' என்னும் இன்னொரு பாட்டு (அகம். 293) கூறுகிறது.

கா.சு.' என்று சுருக்க அளவில் சொல்லாராய்த் 'தமிழ்க்காசு' என்று அன்பு மீதூர அழைப்பது தமிழ்ப் பற்றாளர் வழக்காயிற்று. தமிழ்க் காசு

'தமிழ்க் கா.சு.' 'தமிழ்ப் பொன்' என்ற அளவில் நில்லாமல், இனிய கா.சு. என்னும் பொருளும் தருவதாயிற்று. தமிழ் என்பது இனிமைப்பொருளதேயன்றோ! இனிமையும் நீர்மையும் தமிழென லாகும் என்பது நிகண்டன்றோ!

இன்னும் இத்தொடரை ஆழமாக எண்ணியவர் தமிழ்க்கு ஆசு எனக் கண்டனர்.

‘ஆசு' ஆவது என்ன? அது பற்றாசு. இரண்டு இரும்புகளைப் பற்றவைப்பதற்கு இடையே ஓர் இரும்புத் துண்டை வைத்துக் காய்ச்சியடிப்பது வழக்கம். இடையே வைக்கும் இரும்புத் துண்டுக்குப் பற்றாசு என்பது பெயர். பற்றிக் கொள்ளுதற்கு டமாக இருப்பது என்பது பொருள்.

அதனால் அதனைப் 'பற்றுக்கோடு' என்றும் கூறுவர். ஆதலால், தமிழுக்குப் பற்றுக் கோடாகத் திகழ்ந்தவரைத் 'தமிழ்க காசு' என்பது தகவானதேயாம்.