உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

பற்றாசு

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர் 'தமிழ்க் கா.சு.'; சமயத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் பாலமாக இருந்தவர் 'தமிழ்க் கா.சு.'; மொழித் தூய்மைக்கும் மொழியாக்கத்திற்கும் பாலமாக இருந்தவர் தமிழ்க் கா.சு.; வாழ்வுக்கும் வாழ்வியல் சட்டத்திற்கும் பாலமாக இருந்தவர் தமிழ்க் கா.சு.; கற்றலுக்கும் கற்பித்தலுக்கும், நூற்பயிற்சிக்கும் நூலியற்றலுக்கும் பாலமாக இருந்தவர் தமிழ்க் கா.சு. ஏன்? மெய்ப்பொருள் அறிவு நாட்டத்திற்கும் உலகியல் அறிவுத் தேட்டத்திற்கும் பாலமாக இருந்தவர்-பற்றாசாக இருந்தவர் 'தமிழ்க் கா.சு.' ஆதலால் தமிழ்க் கா.சு. என்று வழங்குபவர் தெளிவுடையர்! தேர்ச்சியுடையர்! பாராட்டுக்கும் உரியர்!