உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் -25

'ஊர்' என்பது மருதநிலைக் குடியிருப்பு. ஊர்க்கு உரியான் ஊரன்; 'ஊரன் என்கோ?' என்பது சங்கநூல்! சாலடிய நாட்டின் தலை நகரின் பெயர் ஊர் (Ur). அதில் மேல்மலைத் தேக்கந் துண்டங்களைக் கண்டெடுத்துள்ளனர். அதன் பழமை நாலாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாம். ஊரிலே ஒரு கல்வெட்டு தென் னாட்டில் இருந்து அணிகலம் செய்தற்காகத் தங்கம் வந்த செய்தியைக் குறிக்கின்றதாம். கிரேக்க மொழியில் நாவாய் என்னும் சொல் புகுந்து ஆங்கில 'நேவி' யாதல் அறிந்தது.

ஓவியம்

ஒவ்வ வரையப்பட்ட ஒன்றே ஓவு, ஓவியம். ஓர் உருவைக் கண்டான் ஒருவன், அதனைக் காணாக்காலும், அதனைத் தீட்டி வைத்த காட்சி கண்டு அவ்வுருவைக் கண்டான் போலக் களிகூரச் செய்வது ஓவியம் ஆகும். ஓவியத் தொங்கலும், ஓவியத் திரையும், ஓவியப் படங்களும், ஓவியமேற்கட்டுகளும் ஆங்காங்குப் பயன்படுத்தும் அழகுச் செல்வங்களாக விளங்கின. 'ஓவியச் செந்நூல்' என ஒரு நூல் இருந்தது என்னும் மணிமேகலை, 'புனையா ஓவிய'த்தையும் காட்டுகின்றது.

ஓவியத்திற்கு உயிர்கொடுத்தலையே ஓவியர்கள் முதன்மை யாகக் கருதிய செய்தியைச் சுட்டும் 'கா.சு.'கழுமலமும் மணிக் கோவையில் வரும் ஓவியக்காட்சி ஒன்றை விரித்துக் கூறுகிறார்.

இருக்குவேத நாளிலேயே தமிழர் கோட்டை கொத்தளம் கட்டியிருந்த குறிப்பைக் காட்டுகிறார்.அரண்மனைக்கு நாலுவாசல் இருந்த செய்தியைக் குறிக்கிறார். வடநாட்டுக் கோயில்கள் தென்னாட்டுக் கோயில்கள் போல் பெரியவையாய் இன்மையை ஒப்பிட்டுக் காண்கிறார்.

மரங்களில் வழிபட்ட மக்கள் மன்றங்களிலும் அம்பலங் களிலும் வழிபட்ட வளர்ச்சியைக் காட்டுகிறார். திருக்கோயில் திருமரங்களே பண்டு தமிழர் மரங்களில் வழிபட்டதற்குச் சான்று என்று சான்றுகள் காட்டுகிறார். நடுகல் வழிபாட்டைத் தொல்காப்பியம் திருக்குறள் புறப்பாடல் குறிப்புகளில் காண ஏவுகிறார்.

இனித் தெய்வத் திருவுருவங்களின் வடிவமைப்பை நுணுகி யுரைப்பதுடன் நாகரிக நிலைப்பகுதியை நிறைவிக்கிறார்: