உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

39

"மக்கள் மனக்கருத்துக்களைச் சிற்ப ஓவியங்களிற் காட்டு முறை தமிழர்களுள் மிக விரிவாகப் பெருகி வளர்ந்தது. நாலுபக்கமும் பார்க்கக்கூடிய தெய்வம் என்று காட்டுவதற்கு நான்கு முகங்கள் அமைப்பதும், வானையும் பார்ப்பதுணர்த்த ஐந்து முகங்களும், கீழ் உலகையும் நோக்குதல் காட்ட ஆறுமுகங் களும் அமைப்பது வழக்கமாயிற்று."

"அஞ்சாமையுணர்த்த அபய கரமும், கொடுப்பதுணர்த்த வரத கரமும், தீமைகளை ஓட்டுவதையுணர்த்த மழுத்தரித்த கரமும், பாதுகாப்பதையுணர்த்த மான்தரித்த கரமும் உருவங்களில்

அமைப்பது வழக்கமாயிற்று.

tr

"இருதயத்தில் நின்று உயிர்களை ஆட்டுவிப்பதையும் உடலில் இருபுறத்திலும் கத்திரிபோலக் குறுக்காகச் செல்லும் மூச் சோட்டத்தையும் குருதியோட்டத்தையும் நரம்பின் அமைப்பையும் உணர்த்த நடேசரது நடன வடிவம் அமைத்திருத்தல் காண்க.

"உடுக்கின் ஒலியினால் படைப்பதையும், அபய கரத்தினால் காப்பதையும், நெருப்பேந்திய கரத்தினால் ஒடுக்குவதையும், ஊன்றிய பாதத்தினால் மறைப்பதையும், எடுத்த பாதத்தினால் வீடளிப்பதையும் காட்டுவான் கூத்தப் பெருமானது உறுப்புக்கள் அமைந்துள்ளன காண்க.'

"திருமால் வடிவத்தில் பிரணவ வடிவாகிய சங்கு ஓங்கார ஒலியால் இறைவன் படைத்தலைக் குறிக்கும் சக்கரம் உலகைக் காப்பதைக் குறிக்கும் தண்டம் அழிப்பதைக் குறிக்கும். வில் மறைப்பைக் குறிக்கும். வாள் பாசத்தை நீக்கி ஞானத்தைக் கொடுத்தலாகிய அருளுதலைக் குறிக்கும்” (52-3)

மெய்ப்பொருட் கருத்துக்களை ஓவியத்தின் வழியும் சிற்பத்தின் வழியும் காட்டும் கலைவல்லார் திறத்தை உணர்ந்து உணர்ந்து கூறியது இது! கடவுளுருவை 'வாளா' கற்பனையால் படைத்தானல்லன் என்றும், அவ்வுருவின் ஒவ்வோர் உறுப்புக்கும் நிலைக்கும் பொருளுண்டு என்றும் நுணுகி யாராய்ந்து கூறிய இக்கூற்று சமய விழிப்புக்கு வழி காட்டுவதாம்.

நாட்டியக் கலை

நாட்டியமாவது கூத்து. குதித்து ஆடுவதால் கூத்து வந்தது என்பர். தாள் என்பது வழியாக வந்தது தாளம்; அத்தாள் குதித்து