உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

ஒலிப்பதால் தாளம் வருவதுடன் அசைவும் குறிப்பும் உளவா கின்றன. ஆகலின் தாளத்துக்கும் கூத்துக்கும் 'தாள்' தான் மூலம் என்க.

நாடகம் என்பது தமிழ்ச்சொல் என்பதையும், அது நள்ளுதல் (பொருந்துதல்) வழியாக வருவது என்பதையும் மொழிஞாயிறு பாவாணர் குறிப்பார்.

நாடகக்கலை கூத்து நடனம் நாடகம் என முத்திறப்படுவதை அவர் விளக்குவார் :

குதித்தாடுவது கூத்து. அது வேத்தியல், பொதுவியல்; உலகியல், தேவியல், வசைக்கூத்து, புகழ்க்கூத்து; வரிக் கூத்து, வரியமைதிக்கூத்து; அமைதிக்கூத்து (சாந்திக் கூத்து) வேடிக்கைக் கூத்து (விநோதக் கூத்து); விளையாட்டுக் கூத்து, வினைக்கூத்து; வெற்றிக் கூத்து, தோல்விக்கூத்து எனப் பல்வேறு வகையில் இவ்விருவகைப்படும்.

நடனம் அல்லது நடம் என்பது அழகுற ஆடுவது. அது நூற்றெட்டு உட்கரணங்களோடும் கை கால்கண் வாய் முதலிய உறுப்புக்களின் தொழில்களோடும் கூடியது. கைவினைகள் எழிற்கை தொழிற்கை பொருட்கை என முத்திறப்பட்டு பிண்டி அல்லது இணையா வினைக்கை எனப்படும். ஒற்றைக்கை வண்ணம் முப்பத்து மூன்றும் பணையல் அல்லது இணைக்கை யெனப்படும். இரட்டைக்கை வண்ணம் பதினனந்தும் கொண்டன வாகும்.

நடம் நடனம் என்னும் தென் சொற்கள் வட மொழியில் நட்ட, நட்டன என்று வலிக்கும். நட்ட என்பதனின்றும் நாட்ய என்னும் சொற்பிறக்கும்.

நடி என்னும் முதனிலை வடமொழியில் இல்லை. நிருத்த என்னும் சொல்லின் ந்ருத் என்னும் அடியையே முதனிலையாக ஆள்வர்.

தமிழ் நடனம் இன்று பரதநாட்டியம் என்று வழங்குகின்றது. பரத சாத்திரம் வடமொழியில் இயற்றப்பட்டது கி.மு. 4 ஆம் நூற்றாண்டாகும். அதற்கும் முந்தியது தமிழ்ப் பரதமேயென்பதை நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாவுள்ள தொன்னூல்களு மிறந்தன" என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரப் பாயிரத்தில் கூறியிருப்பதால் அறிந்து கொள்க.