உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

41

நாடகம் என்பது கதை தழுவி வரும் கூத்து. அது பொருள் கதை (யோனி), தலைமை (விருத்தி), நிலை (சந்தி), சுவை,. வகுப்பு (சாதி), குறிப்பு, விறல் (சத்துவம்) நளிநயம் (அபிநயம்), சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதம் என்னும் பதினான்கு உறுப்பு

களையுடையது.(150-152)

இவற்றையும், தமிழர் நாகரிகம் பண்பாடு ஆயவற்றையும் பாவாணர் இயற்றிய பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூலிற் கண்டு கொள்க.

கூத்து

கூத்து இன்னது என்பதை எளிமையாக விளக்குகிறார் கா.சு. "மனத்தால் நினைப்பதை வாயினாற் பாடுவது போல உறுப்புகளின் குறிப்பினால் கருத்துக்களை விளக்குவது கூத்து எனப்படும் என்பது அது. கூத்து பெரிதும் மகளிரால் ஆடப்படுவ தெனினும் ஆனந்தக் கூத்து ஆடவரால் ஆடப்படுவதென்றும் சுட்டுகிறார். இறைவனும், உமையும், திருமாலும் பிற தெய்வங்களும் ஆடிய கூத்துகளை இனங் காட்டுகிறார்.

கூத்துக்கலை கூடா ஒழுக்கத்தவர் மேற்கொண்ட காரணத் தால் கடியப்பட்டதேயன்றி, அதன் குறைவு ஆகாது என்றும், ஆரியக் கூத்து விளையாட்டு வகையுள் ஒன்றாகலாம் என்றும், பரத நாட்டியத்தில் எவ்வளவு பகுதி ஆரியக் கூத்து என்பது தெரியவில்லை என்றும் சில கருத்துகளை இப்பகுதியில் வைக்கிறார். இசை

சை என்பது 'இனிமை தரத்தக்க ஒலிகளை இசைத்து ஒலிப்பது' என்பது கா.சு. குறிப்பு.

'பண்ணோடு என்னாம் பாடற்கு இயைபின்றேல்' என்பதில் வரும் இயைபு 'இசை'யாகும். பண்ணும் பாடலும் இசைவது உருவும் நிழலும் இசைவது ஒப்பது. அதனால் இசை என்பது ஒரு கருத்து.

பாடுவோனையும் கேட்போனையும் இசையச் செய்வதனால் சை என்பது மற்றோர் கருத்து.

பொறி புலன்களையெல்லாம் பிற வகையிற் போகவிடாது இசைப்பது (கட்டுவது) இரைசயாதலால் இசைப் பெயர் பெற்றது என்பது வேறுமோர் கருத்து.