உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

43

'யாழ்' தமிழ்ச் சொல்; வீணை வடசொல் எனக் கருதினோர் பலர். அவ்வேற்றுச் சொல் வடிவு மயக்க உணர்வாலோ, பெரு வழக்காலோ ஏற்பட்டு விட்டதாம். வீணையும் யாழே போல் தமிழ்ச் சொல்லே!

நரம்பு சுண்டுதலை விண் விண் எனத் தெறிப்பதாகக் கூறும் மக்கள் வழக்கை உணர்ந்தால் உண்மை புலப்படும். விண் - வீண்; பண் - பாண் ஒப்புக் காண்க, ஐ - ஈறு.

இனி வீணையின் நரம்பைச் சுண்டி அல்லது வருடிவிட்டு ஒலியை நுனித்து நோக்குக. ஒலி சுண்டி அல்லது வருடிவிட்ட நிலையிலும் பின் ஒலி குறைந்து குறைந்து வருதல் தெளிவாம். அதனால் வீழ்தல் உடைமையால்வீழ்நை வீணை ஆயிற்று என்று இசைவல்லார் வீ.ப. கா. சுந்தரனார் குறிப்பார்.

'சாலை' என்னும் பழஞ் சொல் 'ரோடு' என்றோ ரஸ்தா என்றோ வழங்கப்படுவதால் வேறொன்றாகி விடுமா? வீணை என்பது பழந்தமிழர் யாழே! கால ஓட்டம், கருத்தோட்டம் கியவற்றால் வடிவ மாற்றம் உறுதல் இயற்கை! காலணி மாற்றங் களைக் காணும் ஒருவன் பண்டைத்தமிழர் காலணி அணிந்திலர் எனலாமோ? மிதியல், அடையல், செருப்பு, தொடுதோல், அடிபுதை, அரணம் என்பனவெல்லாம் தம்முகங் காட்டுகின்றனவே!

குழல் வகையே நாகசுரம் என்பார். 'நாகசுரம்' நெடுங்குழல் எனப்படுவது கொண்டே இதனை மெய்ப்பிக்கலாம்.

கலைமலிந்த தமிழகம் கலைகளையெல்லாம் கை கழுவி விட்டு விட்டுக், கை பிசைந்து கொண்டிருக்கும் காட்சியையும் குறிக்கிறார்:

"தமிழ் மக்களிற் பலர் எல்லாக் கலைகளிலும் நன்கு பயிலாமை போலவே இசைக்கலையையும் நன்கு பயிலுவதில்லை. தமிழிசைவாணர் பலர் அருமையாக இயற்றியுள்ள பலவகைக் கீர்த்தனைகளையும் தமிழிசை அறிஞர் செவ்வையாகக் கற்றுத் தேர்வதில்லை. தற்காலத்தில் திருவனந்த புரம் இலக்குமண பிள்ளை முதலிய இசைச் செல்வர்கள் முயற்சியால் தமிழிசை புத்துயிர் பெற்று வருகிறது" என்கிறார்..

யாழ்நூல் கண்ட விபுலானந்தஅடிகள், பாணர் கை வழி கண்ட வரகுணர் ஆகியோர் பணி நினைவுகூரத்தக்கது. குடந்தை