உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

சுந்தரேசனார் தமிழிசைப் பண்ணிசைத்தலில் நிகரின்றி அணித்தே விளங்கினார். இந்நாளில் தமிழிசை ஆய்வுக்கெனவே தம்மை ஆட்படுத்திக் கொண்டுள்ள அறிஞர் வீ.ப.கா.சுந்தரனார் தொண்டு எதிர்காலத்தில் எத்துணையோ நல்விளைவுகளை நாட்டுக்கு நல்கும்.

இசைக்கலைப் பகுதியிலே செய்யுட்கலை என்பதையும் இசைக்கிறார் கா.சு. செய்யுள் இயற்றமிழ்ப்பா ஆதலாலும், இயற்றமிழ் கொண்டே இசைத்தமிழ் இயலுமாதலாலும் அதனை இப்பகுதியிலேயே இணைக்கின்றார்.

தொல்காப்பியப் பாவகையைச் சுட்டுகிறார். பிற்காலப் பாவினங்களையும் குறிக்கிறார். பாட்டிடை வைத்த குறிப்பு, பாவில்லாதெழுந்த சொல்நடை. பொருளொடு புணர்ந்த பொய்ம் மொழி, பொருளொடு புணரா நகை மொழி என உரைச் செய்யுளின் நால்வகைகளையும் சுட்டுகின்றார்.

திருக்கோயில்களில் உள்ள இசைநிலைக்கு வருந்துகிறார்: சிவாலயங்களில் அத்திருவருட் பாடல்கள் தக்கமுறையில் பயிற்றப் படுவதும் மதிக்கப்படுவதும் இல்லை வைணவ ஆலயங்களில் அது மதிப்படைந்தாலும் எல்லா மக்களாலும் செவ்விய முறையிற் பாடப்பெறாமல் ஓரினத்தாரால் வடமொழி வேதம் போலப் பிறர்க்கு விளங்காமுறையிற் பாடப் பெறுகின்றன.

"சிவாலயங்களில் நாயன்மார்களுக்கும், வைணவ ஆலயங் களில் ஆழ்வார்களுக்கும் குருபூசைகளும், திருவிழாக்களும் நடக்கின்றனவே ஒழிய அவர்கள் வரலாறுகளையும் உயர்ந்த கருத்துக்களையும் போதிக்கும் சொற்பொழிவுகள் நடைபெறு வதில்லை. அவ்வாறே திருவிழாக்களில் ஒவ்வொரு தலத்தின் ஐதிகங்களை விளக்கும் வரலாறுகளும் சிறப்புக்களும் வழிபடு வோர்க்கு எடுத்துரைக்கப் படுவதில்லை. தக்க சொற்பொழிவு களும் போதனைகளும் ஏற்படுமாயின் கோயில்சிறந்த கலாசாலை களாக விளங்கும்.

கல்வி

இக்கருத்துக்களைக் கா.சு. கூறி நாற்பத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. திருக்கோயில்களில் தவறாமல் பள்ளியறைகள் உண்டேயன்றிக் கல்லூரிக் காட்சி உண்டாயிற்றில்லை. பல்கலைக் கழக மாட்சி அரும்பிற்றில்லை.