உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு “செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்'

45

என்னும் இருவகைக் கேட்டுக்கும் திருக்கோயில்கள் இ டமாக இருப்பதால்தான் பிறபிற மதங்களுக்குப் பலப்பலர் பாய்ச்சல் காட்டவாய்க்கின்றது; "நாமே அங்கே போ! அங்கே போ! என்னும் தள்ளுதலைச் செய்துவிட்டுப் போகிறானே; போய் விட்டானே! அழைத்து விட்டானே" என்று இரங்குதல் மெய்யான நடிப்பேயன்றி வேறன்று! ஆக்கம் செய்வார் போல் அழிவு செய்யும் கேடர் செயல் அது என்பதை மெய்க்கண்ணுடையார் என்று காண்பரோ? இலக்கண ஆய்வில் தலைப்படும் கா.சு.தொல்காப்பியத்தை முதன்மைப்படுத்தி அதன் காலப்பழமை இருக்கு வேதத்திற்கும் முற்பட்டதென்னும் நச்சினார்க்கினியர் கருத்தை அழுத்துகிறார். பாரதப் போருக்கும் பாணினிக்கும் முற்பட்டதையும் குறிக்கிறார்.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ஆவணி முதலாகத் திங்களை எண்ணும் காலக்கணக்கு இருப்பதால் வானியல் ஆய்வார் கணக்குப்படி 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக வேண்டும் தொல்காப்பியர் காலம் எனத் தெரிவிக்கிறார்.

தொல்காப்பியத்தில்பிற்காலத்தாரால் சிற்சில பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பினும் அதன் ஆதிப்பகுதி மிகவும் பழமையானது என்கிறார்.ஆதிப்பகுதி என்கிறார். ஆதிப்பகுதி என்பது எழுத்து சொல்லாகலாம். பொருளில் உள்ள இடைச் செருகல்கள் இவையெனக் குறித்திலர். செருகல் உண்டென அமைகிறார்.

மருத்துவம்

மருத்துவத் துறை யாய்வும் இப்பகுதியில் இடம் பெறுகிறது. திருக்குறள் 'மருந்து' பெரிதும் இவண் கருதப் பெறுகிறது. சித்த மருத்துவச் சீர்மை செப்பப்படுகிறது. வைத்தியத்திற்கு உயிராயுள்ள மூப்பு என்பதைக் கண்டு பிடித்து அதன் துணைக்கொண்டு உலோகங்களையும் நஞ்சுகைைளயும் சுத்தப்படுத்திப், பசிக்கு உணவுபோல நோய்க்குரிய செந்தூரம், பற்பம், சுண்ணம் முதலிய மருந்துகளைத் தயாரித்த தனிப்பெருமாண்பு தமிழ்ச் சித்தருக்கே உரியது. ஆனால் அவர்கள் கண்டு கூறிய முறைகள் ஒழுங்காகப் போதிக்கப் படாமையால்சித்தர் நூற்பொருளறியாது தவறான முறையிற் சென்று பலர் இடர்ப்படுதலின் உண்மைச் சித்த மருத்துவம் நன்கு பரவாதிருக்கின்றது. இது தமிழருக்கு ஒரு