உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம் 25

குறைவாகும். குட்டம், காசம், இருமல் முதலிய நோய்களை வேரறக் களையும் தாமிரபற்பம், தாளக செந்தூரம், இரசசுன்னம் முதலியன பிற மருத்துவ முறைகளில் உளவாயின் அவை தமிழ் நூல்களிலிருந்து தழுவப்பட்டனவேயாகும்

என உறுதி மொழிகின்றார். காயகற்பம், இரசவாதம், யோகம்,மந்திரம் என்பனவற்றையும் உரைக்கின்றார்.

துறவும் பிறவும்

மெய்ப் பொருளாய்வு, அறநெறி, கணிதம், வானநூல், கணியம் (சோதிடம்) என்பவற்றில் தமிழ் மாந்தர் பெற்றிருந்த ஆற்றலையும் நினைவு கூர்கிறார்.

"இல்லறம் ஆற்றியபின் உலக நிலையாமை உணர்ந்து வீட்டு நெறி நிற்றல் தமிழர் மரபு" என்றும், "மருந்து மந்திரம் மணி வாதம் யோகம் ஞானம் ஆகிய ஆறும் பிற்காலச் சித்தர் நூல்களிற் கலந்து பேசப்படும் என்றும், “நீதி இலக்கியத்தில் தமிழ் வடமொழியை வென்றது என்று டாக்டர் கால்டுவெல் கூறுகிறார்" என்றும், "கோடிக்கு மேற்பட்ட எண்களைத் தமிழர்கள் தெரிந்திருந்தனர் என்றும், கதிரவனை முதலாகக் கொண்டு கணிக்கும் ஆண்டுமுறை தமிழர்க்குரியது என்பது ஆராய்ச்சிக் கருத்து என்றும் பல கருத்து களை வெளியிட்டுகிறார்.

இசைக்கலை என்பதே தலைப்பாயினும் பலவகைக் கலை களையும் இவண் சுட்டுதல், தென்னை, மா, வாழை முதலிய மரங்கள் இருப்பினும் மாமர மிகுதியால் 'மாந்தோப்பு' எனப்படுதல் போன்றது என்க.