உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

சமைத்தல்

கரடு முரடாக ஒழுங்கற்றுக் கிடந்த கல்லைமாந்தன் கலைத் திறத்தால் சிலையமைத்தல் 'சிலை சமைத்தல்' எனப்படும். இவண் 'சமைத்தல்' என்பதும் ஒழுங்குறுத்தலாகவே அமைதல் அரிக.

ஒரு பெண் ஓராடவனை மணத்தற்குரிய 'பருவநிலை' எய்துதலைச் சமைதல் என்பது பெருகிய நாட்டு வழக்கு. அவள் வாழ்வுக்குத் தகும் பக்குவம் அல்லது தகவு அடைந்தாள் என்பதை விளக்கும் சொல்லே சமைதல் என்பதாம். ஆளானாள், பெரிய வளானாள், அறிவடைந்தாள்; புரிவு தெரிந்தாள், முதுக்குறைந் தாள் என்னும் வழக்குகளை அறிந்தால் இவ்வுண்மை மேலும் தெளிவாம். இவற்றால் சமயக் கலையின் பொருட்சிறப்பும் நலப்பாடும் இனிதின் விளங்கும்.

சமயக் கலை

இச்சமயக்கலை இருகூறுபட்ட தெனலாம். ஒன்று வழி பாட்டுக் கூறு. மற்றொன்று மெய்யியல் அல்லது மெய்ப் பொருட் கூறு. இவ்விருவகைக் கூறுகளாலும் 'கா.சு' தம் ஆய்வை நிகழ்த்து கிறார்.

தமிழர் சமயம்தொன்மைமிக்கது. அது வழிபாட்டுக் கூறாகக் கிளர்ந்து, மெய்யியற் கூறு சிறந்து வளர்ந்தது.

"தெய்வம் உணாவே' எனத் தெய்வத்தினை உணவுக்கு முற்படு கருப் பொருளாகத் தொல்காப்பியம் கூறுவதுடன், முதற் கருப்பொருளாகவும் குறித்தது அறிதல்வேண்டும். அவரே கந்தழி, வள்ளி, கொடிநிலை என்பவை கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமென்றதும் எண்ணத்தக்கது. ஆடவர் பீடும் பெயரும் எழுதி வழிதொறும் நடுகல் நாட்டும் வழக்கம் இருந்தமை இலக்கியக் காட்சியாவதுடன், 'இருமூன்று கல்லெனத் தொல்காப்பிய ஆட்சியுமுண்டு. காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், வாழ்த்து, வரப்பேறு என அவ்வறுவகைக் கல்விளக்கமாகச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் எழுந்ததும் சிந்திக்கத் தக்கது.

பின்னே வளர்ந்த பரிபாடல்,வாரப் பாடல், தேவார திருவாசக நாலாயிரப் பனுவல், திருப்புகழ், திருவருட்பா இன்ன வெல்லாம் வழிபாட்டுக்கருவிகளாம். இவை பண்ணோடு இசைத்துப் பரிந்து நின்று பாடும் பாடுதுறையாகவும் ஆடுதுறையாகவும் 'கூடுதுறைகள்' எனின் சாலும்.