உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

49

வழிபாட்டுத்துறை ஒருசார் இவ்வாறாக, மெய்யியல் துறை அல்லது மெய்ப்பொருட்டுறை, வழிபாட்டுத துறையின் வளர்ச்சியால் அரும்பி வளர்ந்துமுருகியதாகும்.

முப்பொருள்

ஆசிரியர் தொல்காப்பியனார்காலத்திற்கு முற்படவே இறை, உயிர், உலகு என்னும் முப்பொருள் உண்மை அறியப்பட்டு விட்டது. அம்முப்பொருள் உண்மையை அவர் ஆங்காங்குத் தெளித்துச் செல்கிறார். எழுத்துகளின் பெயரீடு வழியாலும் உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம், வல்லினம், மெல்லினம், இடையினம், புணர்ச்சி,உயிர்மயக்கம், மெய்ம்மயக்கம், உருபு மயக்கம் இன்ன வற்றின் விளக்கங்களாலும் மெய்யில் கருத்தை அமைத்துச் செல்கின்றார். அதனைத் திருவள்ளுவர் தனிப்பகுதியாக்கி நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஊழ் எனத் துறவுப்பகுதியில் முறைப்படுத்தினார். பின்னே மெய் கண்டார் முதலிய பெருமக்களும், திருமூலர் முதலிய ஓகம் வல்லாரும் மெய்யியலைப் பெருக்கமாக வளர்த்தனர். இவை யெல்லாம் வழிவழியாகத் தமிழர் வழ்வியலில் வளர்ந்த வளர்ச்சிக் கொடை யேயாம்.

வடசொல்

இத்தகு கொடைப் பொருளாம் மெய்யியற் கலையில் வழங்கும் கலைச் சொற்களுள் பலவும் வடசொல்லாக இருத்தலை நோக்கித்தமிழர் பெற்றுள்ள மெய்யியல் வளமெல்லாம் வடமொழி வழிப்பட்டதோ எனக் கருதுவார் உளர்; எழுதினாரும் இயம்பி வருவாரும் உளர். இதனை எண்ணி கா.சு. தமிழ் நூல்களிலுள்ள வடமொழிச் சொற்களை முதற்கண் ஆய்கிறார்:

"தமிழ் நூல்களிலுள்ள வடமொழிச் சொற்களை ஆய்ந்து கொண்டு போனால் இவற்றை நாளிலும் கம்பர் காலத்தில் வடமொழிச் சொற்கள் குறைவாகவும், சங்க காலத்தில் அதிலும் மிகக் குறைவாகவும் காணப்படும். திருவள்ளுவர் நூலில் உள்ள சுமார் பன்னீராயிரம் சொற்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட வடமொழி இல்லை என்ப. அவை தாமும் தமிழில் நின்று வடமொழிக்குப் போயினவோ என்னும் ஐயப்பாட்டிற்கு இடந்தருவன. இதனால் நாம் தெரிவது யாதெனில் பண்டைக் காலத்தில் அஃதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரியக் கலப்பு மிகவும்