உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

குறைவாய் இருந்தது என்பதே, இதற்கு முற்பட்ட ஒரு காலத்தில் ஆரியக் கலப்பு அறவே இல்லாது இருந்திருக்க வேண்டும்."

திருக்குறளில் ஐம்பதுக்கு மேற்பட்ட வடமொழிச் சொல் இல்லை என்று கா.சு. கூறினாலும், அதில் பாதியில் பாதிதானும் ல்லை என்பது தெள்ளிதின் விளங்குகின்றது. மிக அரிதான சில சொற்களும் தமிழில் நின்று வட மொழிக்குச் சென்று மீண்டு திரும்பிய சொற்களாம். தமிழகத்தார் கடல் கடந்து அயல்நாடு சென்று, தலை முறைகள் சில வாழ்ந்து, மீளவும் தமிழ்நாடு வந்து புகுந்தாற் போன்ற நிலையுடையவாம் அம்மீட்சிச் சொற்கள்.

தமிழர் கண்ட மெய்யியற் கலையில் வடசொற்களை நாட்டுதல் ஏனோ, அதனை வடமொழியாளர்களே கண்டன ரோ என வினவுவார் உளராயின் அதனையும் கருதுகிறார் கா.சு.

தமிழர் தங்கள் கருத்துக்களை வடமொழியிற் கூறுதல் நெடுநாள் வழக்கமாயிற்று. புதுமை, தோற்றப் பொலிவு முதலிய காரணங்களால் அவ்வழக்கம் ஏற்பட்டதாகும். இதனை நன்கறிந்த டாக்டர் சிலேட்டர் “ஆரியரெல்லாம் நகரிகத்தால் திராவிடராயும், திராவிடரெல்லாம் மொழியளவில் ஆரியராயும் ஆயினர் என்றார்" என்கிறார்.

திராவிடர்களின் நாகரிக வளத்தைத் தம் உடைமையாக ஆரியர் ஆக்கிக் கொண்டனர். திராவிடரோ, ஆரியரின் மொழியில் உள்ள சொற்களை எடுத்துக் கொண்டனர். இவ்வாறு செய்தக்க அல்ல செய்த' தாலும், செய்தக்க செய்யாமை யாலும் தமிழர் சமயக் கலை முதலிய கலைகளெல்லாம் ஆரியக் கலையாகப் பொய்த் தோற்றமுற்றன என்பதே மேலே குறித்த குறிப்பின் விளக்கமாம்.

வழிபாடு

இனி,வழிபாடு தோன்றிய முறையையும் வளர்ந்த வகை யையும் பற்றிச் சில கருத்துகளை வழங்குகிறார் கா.சு.:

"இறந்த தாய் தந்தையரை மக்கள் தொழத் தொடங்கினர். அவர்களை அடக்கம் செய்த இடத்தில் கல்நாட்டி, அக்கல்லில் அவர்கள் உறைந்து நலந்தருவதாக நம்பி வழிபட்டனர்.கடல் கொண்ட தென்னாட்டுத் தொன்மக்களில் ஒரு பிரிவார் பன்னிரண்டு முதல் பதினைந்து அடி உயரமுடையவராய். முன்