உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

51

தலையின் நெற்றிப் பகுதியில் கண் போன்ற ஓர் உறுப்புடையவராய் விளங்கினர். அவரைப் போற்றி வழிபட்ட வழிபாடே முக்கண்ணன் வழிபாடாக முகிழ்த்தது என்கிறார். காட்டு எலியட்டு என்பார் முக்கண் மாந்தரைப்பற்றிக் குறித்ததையும் குறிக்கிறார்."

சிவனியம்

சிவன் என்பது தமிழ்ச்சொல் என்பதையும், ஆரியர் தென்னாடு வருமுன்னரே சிவ வழிபாடு தென்னாட்டில் விளங்கியது என்பதையும், சிவ என்பது செம்மை, நன்மை, மங்கலம் என்று பொருள்படும் என்பதையும், தமிழர் குறிஞ்சி நிலத்தில் இருந்த போதே அவ்வழிபாடு ஏற்பட்டுவிட்டதென்பதையும் குறிக்கிறார்.

"பெற்றோர் வழிபாடு என்பது தாய் தந்தை ஆகிய இரு கூறுபட்டது அன்றோ! அவ்விரு கூறும் ஓருருவில் காணப்பட்டதே அம்மையப்பர் தோற்றம்! இவ் வழிபாட்டின் முதிர்வே கதிரவன் வழிபாடாயிற்று. கதிரினின் செந்நிறம் சிவமாகியது."

காலைக் கதிராம் இளங்கதிர் முருகனாகக் கருதப்பட்டது. நீலக்கடலின்மீது நீலவானுக்கு முன்னாகத் தோன்றும் இளஞ் செஞ்ஞாயிற்றின் காட்சி, தோகைவிரித்த மயிலின் மீது வீற்றிருக்கும் சேயோன் காட்சியாகி முருகனுமாயிற்று.

'மலையுச்சியில் அக்காட்சி தெளிவாகத் தோன்றி வணங்கப் படுதலின் மலைநிலக் கடவுளாக அம்முருகு கொள்ளப்பட்டது" என விளக்குகிறார்.

சேய்

'சேய்' பற்றி இவண் கருதுதல் வேண்டும்.'சேயோன்' என்பது, சிவன் என்னும் சொல். தமிழில் தோன்றுவதற்கு முற்பட்ட சொல் எனலாம். ஏனெனின், சேயோன் என்னும் ஆட்சி தொல் காப்பியத்தில் உண்டு. ஆங்குச் 'சிவன்' என்னும் சொல் இல்லை.

மற்றும், 'சேயோன்' மலைநிலக் கடவுள். சேயோன் மேய மைவரை உலகம் என்பது தொல்காப்பியம். 'சே' என்பது செம்மை வண்ணத்தின் வழிவந்த சொல். சிவந்த அடி சேவடி என்றும், சிவந்தவன் சேந்தன் என்றும், சிவந்தது சேந்தது என்றும் வழக் குண்மை அறிக.

சேயோன் என்பது சிவப்பு வண்ணத்தன் என்பதைத் தாமரை புரையும் காமர்சேவடி, பவளத் தன்ன மேனி, திகழொளி, குன்றி