உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையார்

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

53

யானை கானுறை விலங்கே எனினும், பரிய விலங்கே எனினும், மாந்தன் எண்ணத்தை ஈர்க்க வல்ல தோற்ற முடையதே எனினும் அவ்வழிபாடு முதற்கண் ஏற்பட்டது என்றற்கோ சான்று அகப் பட்டிலது. தேவாரப் பதிகங்களிலும் பிற்காலத்தொன்ம நூல் களிலும் பேசப்படுவதும் பிள்ளையார் வழிபாட்டைச் சேயோன் வழிபாட்டுக்கு முற்படுத்த, முறைவாய்ந்த சான்றில்லை எப்து வெளிப்படை.

கதிரோன் வழிபாட்டினின்று கிளர்ந்த சேயோன் வழிபாடு எத்துணைப் பழமையானது! கதிரினும்பழமையதோ களிறு? மலையிற் கிளர்ந்து பரவும்மணமிக்க முருகிற் பழமைப் பட்டதோ யானை?

இலங்கம்

உருவ வழிப்பாட்டின் தொன்மை, 'குறி' எனப்படும். 'குறி' யாவது அடையாளம். அதன் பொருளறிவாரா நிலையால், 'பொருள்' வேறு குறித்துக் கதை வேறு சமைத்துக் கொண்டனர். குறி குணங்கடந்த முதல், அருவத் தோற்றத்தது. அதற்கு, அருவுக்கு அருவாகவும், உருவுக்கு உருவாகவும் கொண்ட வடிவாய்க் கண்டது இலிங்கம் என்னும் குறியாம்.

இலங்குதலையுடையது அல்லது விளங்குதலையுடையது இலங்கம்.'எல்லே இலக்கம்' என்பது தொல்காப்பியம். எல் என்பது ஒளிப்பொருட்டது. 'எல்' கதிரோனைக் குறித்தல் பழ வழக்கு. 'எல்லங்காடி' பகற்கடையைக் குறித்தலும் பழவழக்கே. எல் வழியாகத் தோன்றிய எலும்பு வெண்ணிற ஒளியுடைமை காண்க. எல் வழிபாடு உலகெல்லாம் தழுவிய பழவழிபாடு என்பதை வரலாற்றுலகம் கூறும். ஆகலின், அக்கதிர் வழிபாட்டுச் சான்றாம் குறியே 'இலங்கமே' இலிங்கமாகச் சொல்லப்பட்டதாம்.

கடல்கொண்ட தென்னாட்டு வழிபாடும், சிந்துவெளி மாந்தர் வழிபாடும் இலங்க வழிபாடாகத் திகழ்ந்திருத்தலை உணர்வார். அதற்கு முற்பட யானை வழிபாடு நேர்ந்தமை கொள்ளல் யலாதாம்.

இனிப்பேரன், மகன், தந்தை, பாட்டன், கொள்ளுப்பாட்டன் (பூட்டன்), எள்ளுப் பாட்டன் (ஓட்டன்), சேயோன் (சிய்யான்) என