உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

வழங்குவதும்; பேரன் மகனும் அவன் மகனும் கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் எனவும் வழங்குவதும், பேர்த்தி, மகள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி(பூட்டி), எள்ளுப் பாட்டி (ஒட்டி), பழையோள் என வழங்குவதும் பேர்த்தியின் மகளும் அவள் மகளும் கொள்ளுப் பேர்த்தி எள்ளுப்பேர்த்தி எனவும் வழங்குவதும் அறிதல் வேண்டும்.

'சேயோன், பழையோள்' ஆயதொன் மூதாளர் வழி வருவதையே பரம்பரை என்பதும் அறிதல் வேண்டும். பரன் ஆண்பால்; பரை பெண்பால். இரண்டும் இணைந்த பரன்பரை பரம்பரையாயிற்றாம்.

பரம் என்பது சேய்மை. அப்பால், மேல் முன் என்னும் பொருள் தருவது. பரன் - சிவன்; பரை - சிவை. பரம்பொருள் பரதேயம் என்பனவற்றைக் கருதுக.

பாண்டியனைப் 'பழையோர்' என்றது அறிக. சிவன் பாண்டியனாக வந்தான் என்றும், உமை தடாதகைப் பிராட்டியாக வந்து பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்தாள் என்றும் வரும் தொன்மக் குறிப்புகளை எண்ணுக.

இனி, முருகனைப் 'பழையோள் குழவி' என்றதும் எண்ணத் தக்கதாம்.

இவ்வகையால் கதிர் வழிபாடு முருகன் வழிபாடாய்ச் சிவன் வழிபாடாய்ச் சிறந்ததாம் என்பது சாலும் என்க.

தாய் வழிபாடு

தந்தை வழிபாடு கதிராய், முருகாய், சிவமாய்த் திகழ்ந்த தென்னின், தாய் வழிபாடு அவ்வாறு விரிந்த வகையும் காணக் கூடியதாம்.

"கதிரவனை இடமாகக் கொண்டசிவபிரான் வெம்மை யினால் அச்சம் விளைக்கும் தந்தைத் தெய்வமாகக் கருதப்பட்ட போது, தண்ணளியுடைய தாய்த் தெய்வத்தின் வடிவம் தண்ணீ ராகக் கருதப்பட்டது. ஆழமுள்ள தண்ணீரின் நிறம் நீலமாதலின் தாய்த் தெய்வத்தின் நிறமும் நீலமாயிற்று.

"சந்திரன் குளிர்ச்சி தருவதாகத் தோன்றுவதால், சந்திரன் தாயின் அருவுரு வடிவமாகக் கருதப்படுதற்கு ஏதுவாயிற்று. சூரிய