உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

55

ஒளியில் தோன்றும் ஏழு நிறங்களில் முதலிலுள்ளது சிவப்பும் இறுதியிலுள்ளது நீலமுமாம். பாதி ஆணும் பாதி பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறமாகவும் பெண்பகுதி நீலநிறமாகவும் கொள்ளப்பட்டது.

'சிவம் என்ற சொல்முழுமுதற் கடவுளைக் குறிக்கப் பயன் பட்டபோது எங்கும் நிறைந்திலங்கும் கடவுளின் ஆற்றல் சத்தி எனப்பட்டது. கடவுள் தன் ஆற்றலினால் எல்லாம் செய்வது உயிர்கள்மேல் வைத்த அருள் காரணமாம் என்ற கொள்கை எழுந்தபோது சிவசக்தி அருளெனவும் தாயெனவும் வழங்கப் பட்டது.

79

தாய்த் தெய்வ வழிபாடு மாலிய வழிபாடாக வழிப் பட்டதையும் தெளிவுறக் காட்டுகிறார் கா.சு.

"கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும், அவன் ஒளியைச் சத்திக்கு உவமையாகவும் வழங்கியபோது அவ்வொளி பரவிய டமாகிய விண்ணும் சத்திக்குப் பேராயிற்று. 'விண்ணு' என்ற பேரே 'விண்டு' எனவும் 'விஷ்ணு' எனவும் மாறிற்று' என்னும் கா.சு., "இருக்கு வேதத்தில் விண்ணிற் பரவிய கதிரொளியே விணுவாகப் பேசப்பட்டது. வியாபக ஆற்றல் ஆண்தன்மையாகக் கருதப்பட்டபோது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சத்தியின் ஆண் வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக் கருத்துடைய ஆகம சுலோகமும் உண்டு" என்றும், 'சொல்லின் இடையே ஷகரத்தை டகர ணகரங்களுக்குப் பதிலாக அமைத்துக் கூறுதல் ஆரிய மரபு. குட்டம் என்பதைக் குஷ்டம் எனவும், வேட்டி என்பதை வேஷ்டி எனவுங் கூறுதல் காண்க. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீலநிறமே பேசப்படுதல் காண்க" என்றும் கூறுகிறார்.

மாயோள் வழிபாடே மாயோன் வழிபாடாகவும் கண்ணன் வழிபாடாகவும் உருக் கொண்டது எனக்கருதும் கா.சு. அதனை விளக்குகிறார்.

CC

ருளடைந்த பொழில்களில் வணங்கப்பட்ட தாய்த் தெய்வத்திற்குக் கருநிறம் பேசப்பட்டது. மாயோள் என்ற தமிழ்ச் சொல் கருநிறமுடையவள் என்று பொருள்படும். மாயோள் ஆண் வடிவமாகத் தொழப்பட்டபோது மாயோன் என்ற சொல் வழக்கத்திற்கு வந்தது. காடுகள் அடர்ந்தமுல்லை நிலத்திற்குரிய தமிழ்த் தெய்வம் ஆதியில்மாயோளாய் இருந்து பின் மாயோ னாயிற்று.'