உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

57

கொற்றவை காடுகிழாஅள் முதலியன அச்ச வடிவாய் நின்ற அம்மை பெயராகும். பழையோள், மாயோள், உமை முதலியன அன்பு குறிக்கும் அம்மை திருப்பெயர்களாம். காளி வணக்கம் தமிழர்க்குரியதென்றே வட நாட்டில் கருதப்படுகின்றது.

அம்மையின் ஆண்வடிவமே திருமால் என்று சிவா கமங்கள் கூறும். மாயோள் வழிபாடே மாயோன் வழிபாடாயிற்று என்பதும். குழலூதும் கண்ணன் தமிழ்த் தெய்வமே என்பதும், தமிழ் நூலாராய்ச்சியின் முடிவாகும் என்கிறார்.

இரு சமயப் பொதுமை

தமிழர் சமயம் என்பது சிவனியம் மாலியம் என்னும் இரண் டையும் ஒருங்கு சுட்டுவதே என்பதைப் பலப்பல சான்றுகளால் நிறுவுகிறார் கா.சு. திருமுறை நூல்களையும் திருவாய் மொழியையும் ஒப்பித்துக் காட்டி விளக்குகிறார்.

முழுமுதற் கடவுளாம் இறைவன் மூவராலும் அறிய முடியா தவன், இறைவன் அறிவு வடிவானவன், இறைவன் உடலில் உயிர் போலவும் பாலில் நெய் போலவும் கலந்திருப்பவன், உயிர்களும் உலகமும் இறைவன் உடைமைகள். இருள், வினை, மருள் என்னும் மூவகைப் பாசங்களும் உயிர்க்குண்மை, இறைவனைக் குருவனாக வழிபடல் இன்னவையெல்லாம் சிவனியத்திலும் மாலியத்திலும் ஒப்பவிருத்தலை எடுத்துக் காட்டி விளக்குகிறார். மேலும், இறைவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியாகவும் கொண்டு கூறும் மரபு இருபாலும் இருந்தமையையும் குறிக்கிறார்.

சிவநெறியின் திருப்பொருளாகத் திருநீறு விளங்குதல் வெளிப்படை. ஆனால் மால்நெறியிலும் திருப்பொருளாகத் திருநீறு விளங்கியமையையும் நுணுகித் தேர்ந்து குறிக்கிறார். 'நம்மாழ்வார் காலத்தில் திருநீறே இரு சமயத்துக்கும் பொது ரு அடையாளமாக இருந்தது. கரிய மேனிமிசை வெளிய நீறு' 'நீறுசெவ்வேயிடக் காணில் நெடு மாலடியார் என்று துள்ளும்' முதலிய வாக்கியங்களுள் "நீறு என்பது திருநீற்றைக் குறிப்பது போலும்" என்கிறார். அறுவகைச் சமயக் குறிப்பு இருசமயத்தும் இருத்தற்கும் சான்று காட்டுகிறார். அவ்வறுவகைச் சமயத்தின் வழிபாட்டாளரே அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கத்தார்' எனத் தொல்காப்பியனாரால் சொல்லப்பட்டவர் என்பது புதுமையாக இருக்கிறது.(3-10)