உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

வழிபாட்டு வகை

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

வழிபாடுகள் அருவ வழிபாடு, அருவுருவ வழிபாடு,உருவ வழிபாடு என மூவகைத்தாம். “அருவ வழிபாடு செய்ய இயலாத யாவரும் அருவுருவ வழிபாட்டை மேற்கொண்டனர். அவருள்ளும் உருவ வழிபாடு செய்ய விரும்பினவர்கள் ஆறு சமயங்களில் ஒன்றற்குரிய முறையினைப் பின்பற்றி ஒழுகினர்" எனக் கூறும் கா.சு., பழமையான அறுவகைச் சமயங்கள் சிவன், மால், சத்தி, முருகன், பிள்ளையார், கதிரோன் என எண்ணுகிறார். பிற் காலத்தில் வந்து வழங்கிய அறுவகைச் சமயங்கள் 'உலகாயதம், நாலுவகைப் புத்த மதம், சமணம்' என எண்ணி அமைகின்றார். "வைதிக நூலார் தார்க்கீகம், மீமாம்சகம், ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சாராத்திரம் என்னும் ஆறினையும் ஆறு சமயம் என்றனர் என்கிறார். இவையும் பிறவும் தமிழர் அறுசமயத்துக்கு வேறாய் ஆரியத் தொடர்பால் ஏற்பட்டன என அறிக. தமிழரது அறுசமயமும் ஒரு சமயமே.பிரிந்த மால் சமயத்தை மீட்டும் ணைத்துக் கொள்வதே நமது கடமையாகும் என்று தமிழர் மதத்தின் இணைப்புக்கு வழிகோலுகிறார். இவ்வழிகோலுதல், நிலைப்படுத்தப்படின் சமய ஆக்கத்திற்கும் இன ஆக்கத்திற்கும் பெரிதும் உதவும். இதனையும் அவர் சுட்டுகிறார்.

"தமிழ்ச் சைவ வைணவ சமயங்கள், அடிப்படையில் ஒத்த கருத்துடையன. அது தொல்காப்பியம், திருவள்ளுவ நூல், பரிபாடல் முதலிய சங்க நூலாராய்ச்சியாலும் தேவார திருவாசக திருவாய்மொழி திருமொழி ஆராய்ச்சியாலும் நன்குபுலனாகும். சைவம் வைணவம் என இரு பிரிவடங்கிய ஒரு சமயத்தைத் தமிழர் சமயமென்று கருதி அதனைத் தமிழ் மக்கள் போற்றுவாராக என்கிறார்.

கொடி நிலை

ஆசிரியர் தொல்காப்பியர்,

“கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே'

""

என்றார். அக்கொடி நிலையைத் திருமாலின் பறவைக் கொடி என்றும், கந்தழியைச் சோ அரண் அழிப்பு என்றும் இளம்பூரணர் கொண்டார். அக்கருத்து, புறப்பொருள் வெண்பா மாலையார்