உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

59

கருத்துமாம். வள்ளிக்குச் சான்று காட்டாராய், 'வந்தவழிக் கண்டு கொள்க' என்றார்.

நச்சினார்க்கினியர், கீழ்த்திசைக்கண்ணே நிலை பெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம் கொடிநிலை என்றும், ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் கந்தழி என்றும், தண்கதிர் மண்டிலம் வள்ளி என்றும் கூறினார்.

வ்விளக்கத்தால், வெஞ்சுடர் மண்டிலமாம் ஞாயிறு கொடிநிலை என்றும், கட்டற்ற ஒன்று கந்தழி என்றும், தண்கதிர் மண்டிலமாம் திங்கள் வள்ளி என்றும் நச்சினார்க்கினியர் கொண்டார் என்பது தெளிவாம்.

தனைக் கா.சு. ஏற்றுக் கொண்டு மேலும் விளக்குகிறார்:

'ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திலேயே மூம்மூர்த்தி கள் உளர் என்ற கருத்து முளைக்கத் தொடங்கிற்று எல்லாக் கோள்களுக்கும் நடுவிலிருந்து தனது கவர் சத்தியால் அவற்றைப் பிணித்து நிற்கின்ற கதிரவனது மண்டிலம் கொடிநிலை எனப்பட்டது.

""

"இரவில் பயிர்களுக்கு உயிர் தரும் திங்கள் மண்டிலம் அமுதத்தை வழங்குவதாகக் கருதப்பட்டு வள்ளி என்ற பெயர் பெற்றது."

"பற்றினவெல்லாம் அழிக்கின்ற நெருப்பு கந்தழி எனப்

பட்டது.

""

கதிரவன் ஒளியால் எல்லாம் உண்டாதலின் சூரிய மண்டிலமாகிய கொடி நிலைக்கு அதிபதி 'பிரமா' ஆவரென்றும், சந்திர மண்டிலத்திற்கு அதிபதி காத்தற் கடவுளாகிய 'திருமால்' என்றும்,நெருப்பு மண்டிலத்திற்கு அதிபதி அழித்தற் கடவுளாகிய 'உருத்திரன்' என்றும் உலகங்கள் எல்லாவற்றையும் அடக்கி நிற்கும் சத்தி மண்டிலத்திற்கு அதிபதி கடவுள் என்றும் கருதப் பட்டது.

""

இவற்றைக் கூறும் கா.சு. பிரம வழிபாடும், திக்குப் பாலகரின் வழிபாடும், நவக்கிரகங்களின் வழிபாடும் ஆரியச் சார்பால் ஏற்பட்டன போலும்" என்கிறார். இவையெல்லாம் மீளாய்வுக் குரிய செய்திகளாம்.