உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

61

"சிவன் கோயிலில் சிவலிங்கத்தை ஓமகுண்டத்தில் வளரும் சோதிக்கு அறிகுறி எனவும், நந்தியை யாகப் பசு எனவும், பலி பீடத்தை யாகஞ்செய்யும் ஊனை வைக்குமிடமெனவும் கொடி மரத்தை வேள்வித் தூணெனவும் வைதிகர்கள் சிலர் கூறுவர் என்பது வைதிகக் குறிப்பு.

"சிந்து தேசத்தில் உள்ள ஹாரப்பா, மோஹஞ் சொதரோ என்னும் இடங்களில் ஆரியர் வருவதற்குமுன் சில்லாயிரம் ஆண்டு களாகக் கிடந்த சிவலிங்கங்கள் கண்டெடுக்கப் படுவதாலும், நெருப்பு வழிபாட்டைப் போற்றும் இருக்குவேதம் சிவலிங்கத்தை கழ்வதாலும் ஆரியர் நெருப்புச் சோதியைச் சிவலிங்கம் உணர்த்தும் என்பது வரலாற்றுக்கு முற்றிலும் முரணாகும். மேற் சொன்ன இடங்களில் காணப்படும் முத்திரைகளிலே காளை வடிவம் பொறிக்கப்பட்டிருத்தலால் அஃது ஆரியரது யாகப் பசு வருவதற்கு முன்னேயே கடவுள் வாகனமாக மதிப்படைந்திருந்தது என்னலாம்.'

CC

'திராவிடருக்குக்காளையும் ஆரியர்க்குக் குதிரையும் சிறந்தன என்பது சரித்திரக் கருத்து. வேள்விக்குப் பொதுவாக ஆட்டினையும் சிறப்பாகக் குதிரையையும் ஆரியர் கைக் கொண்டனர். காளையை அவர்கள் சிறந்த விலங்காகக் கொள்ள வில்லை. ஆதலால் அது யாகப் பசுவைக் குறிக்கின்றது என்பது தவறு. சிவபெருமானுக்குக் காளை வாகனம் உகந்ததாதலின் இறைவன் திருவருள் பெறக்கருதும் உயிர்க்கு அறிகுறியாக நந்தி சிவபெருமான் திருமுன் வைக்கப்பட்ட தென்றறிக.

64

'அம்மை கோவிலில் சிங்க வடிவம் திருமுன் வைக்கப் பட்டிருக்கிறது. முருகன் திருமுன் மயில் இடம் பெற்றுள்ளது. அம்மைக்குச் சிங்கத்தையும் முருகனுக்கு மயிலையும் கொன்று வேள்வி செய்கின்றார்களா? அத்தெய்வங்களுக்கு அவை ஊர்தி என்பதே தெளிவு" என்பது வைதிகக் குறிப்பின் மறுப்பு.

ஆன் - ஆன்மா

இவ்விடத்தில் தமிழர்தம் அடிப்படைச் சமயக் கோட்பாடு அல்லது அறக்கோட்பாடு எண்ணத்தக்கது, 'பசு' பலிப் பொருட்டாகக் கொள்ளல் அறக் கொடுமையாம். தூய அருட் பீடத்தை அறக் கொடும்புலைப் பீட மாக்கல் நினைக்கவும் ஒண்ணாததாம்.